மேலும் அறிய

“வெடி நம்மீது விழுந்தால் பதற்றமின்றி நில், படு, உருள்!” – தீயணைப்பு அலுவலர் கலகல விழிப்புணர்வு !

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல்முறை விளக்கம்!

வெடிக்காமல் போன பட்டாசுகளை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் தீ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால் எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் காயம் ஏற்படலாம்.

தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கணேசன், மாணவர்களுக்கு பட்டாசு பாதுகாப்பு குறித்து நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி நந்தனா வரவேற்றார்.
 
பட்டாசு எவ்வாறு வெடிக்க வேண்டும்
 
நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் பேசும்போது, “தீபாவளிப் பண்டிகையின்போது குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக நம் மீது தீப்பற்றினால் பதற்றமடையாமல் ‘ஸ்டாப், டிராப், ரோல்’ (நில், படு, உருள்) என்ற முறையைப் பின்பற்ற வேண்டும். புஷ்வாணம், சங்கு சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளைப் பற்ற வைக்கும்போது நீண்ட ஊதுபத்தியைப் பயன்படுத்த வேண்டும். பட்டாசைப் பற்ற வைத்தவுடன் சுமார் இரண்டு அடி தள்ளி நின்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் எப்போதும் ஒரு வாளி தண்ணீர் தயாராக வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது. கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசுகளை வெடிப்பதும் ஆபத்தானது. வெடிக்காமல் போன பட்டாசுகளை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் தீ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால் எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் காயம் ஏற்படலாம்.
 
தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
 
நைலான், பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய செயற்கை இழை ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது பாதுகாப்பானது. அதேபோல், பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பைகளில் வைத்துக்கொள்ளக் கூடாது. கவனக்குறைவால் தீப்பொறி பட்டால் பைகளில் உள்ள பட்டாசுகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த முன்னணி தீயணைப்போர் முனீஷ்குமார், தீயணைப்போர் வீரப்பெருமாள், சேது, வீரராகவன், மிக்கேல் டேவிட், சொக்கலிங்கம், வைரமுத்து ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
 
 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
தவெக அரசு கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் துணை மேயர் மன்னன் விசாரணை முடிவு !
தவெக அரசு கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் துணை மேயர் மன்னன் விசாரணை முடிவு !
நாளை தீபாவளி... மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ எவ்வளவு தெரியுமா?
நாளை தீபாவளி... மதுரையில் மல்லிகை பூ விலை கிலோ எவ்வளவு தெரியுமா?
விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கையை எடுக்கின்றனர் - செல்லூர் ராஜூ பேட்டி !
விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கையை எடுக்கின்றனர் - செல்லூர் ராஜூ பேட்டி !
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget