மேலும் அறிய

ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?

parandur airport : பரந்தூர் விமான நிலைய விவகாரம், கிராம மக்கள் ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 690- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பரந்தூர் பசுமை விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur greenfield airport ) அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?

தொடரும் போராட்டம்  ( parandur airport protest )

கிராம மக்களின் போராட்டம் 690 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதுபோக கிராம சபைகளில் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, பேரணி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஏகாம்பரம் கிராம மக்கள் ஈடுபட்டனர் இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 நில எடுப்பு அறிவிப்புகள்

இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள். ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?

இந்தநிலையில் தேர்தல் முடிவு பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம்  அமைப்பதற்கு மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தொழில் முதலீடு ஊட்டுவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்,  புதிய பசுமை வேலி விமான நிலையம் திட்டம்  அமைப்பதற்கான  நில எடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிராம மக்கள் அதிர்ச்சி முடிவு

இரவு நேர போராட்டம் 700-வது நாளை, வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை எட்ட உள்ளது. இதனால் கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் குடியர இருப்பதாக நூதன போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், விவசாயத்தையும், நீர் நிலைகளையும் காக்க போராடிவரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல், நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது.

விவசாயிகள் வாழ தகுதியில்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை பெருமையாக கருதுகிறோம். சொந்த மண்ணில் அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என ஒட்டுமொத்த மக்கள் முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர். எனவே ஆந்திர மாநிலத்தில் இடம் தஞ்சம் அடைய, போராட்டக் குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
Embed widget