Kanchipuram: காஞ்சிபுரம் பாலாற்றில் ரூ.70 கோடியில் தடுப்பணை.. விவசாயிகள் ஹேப்பி - எங்கு அமைகிறது ?
Palar Check Dam: காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றி வெங்குடி பகுதியில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைய உள்ளது.

Vengudi Check Dam: காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தென்னிந்தியாவின் வரப்பிரசாதம் பாலாறு
பாலாறு தென்னிந்தியாவின் மிக முக்கிய ஆறுகளின் ஒன்றாக இருந்து வருகிறது. பாலாறு கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகாவில் 93 கிலோமீட்டர் பாலாறு பாய்கிறது, ஆந்திர பிரதேசத்தில் 33 கிலோ மீட்டரும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 222 கிலோமீட்டர் பாலாறு பாய்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை பகுதிகளில் பாலாறு தமிழ்நாட்டில் பாய்கிறது.
ஏரிகளுக்கு உயிர் கொடுக்கும் பாலாறு
வடகிழக்கு பருவமழையின் போது, பாலாற்றில் வெள்ள நீர் வரும்போது கால்வாய்கள் மூலம் ஏரிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக இந்த பாலாறு இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் குறுக்கே 20 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வெளியான அறிவிப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில், 30 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரத்தில் 25 கோடி ரூபாயிலும், பழைய சீவரத்தில் 32 கோடி தடுப்பணைகள் கட்டப்பட்டன.
விவசாயிகள் மகிழ்ச்சி
தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று ஏரிகளும் முழுமையாக நிறைந்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பல இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டால், விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு வரப்பிரசாதமாக அமையும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாலூர், பெரும்பாக்கம், வெண்குடி ஆகிய இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ந்து, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தடுப்பணை குறித்து எந்தவித அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் விவசாயிகள் வேதனையில் இருந்து வந்தனர்.
வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
சட்டசபையில் இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வெங்குடி பகுதியில், தடுப்பணை கட்டுவதற்கான திட்டத்தை அமைச்சர் ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: காஞ்சிபுரம் மாவட்டம் வெங்குடியில் பாலாற்றின் குறுக்கே 70 கோடி ரூபாயில், 660 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் உயர முடிய அணைகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.
சிறப்பம்சங்கள் என்ன? Key Features Of Vengudi Check Dam
வெங்குடி தடுப்பணை பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயனுள்ளதாக அமையும். கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் கனிசமாக உயரும். இதேபோன்று சுற்று வட்டார பகுதியில் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நிதி ஒதுக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

