![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Xiomi Layoffs : அச்சச்சோ...கொத்து கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் Xiomi.. வேதனையில் இந்திய பணியாளர்கள்..
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
![Xiomi Layoffs : அச்சச்சோ...கொத்து கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் Xiomi.. வேதனையில் இந்திய பணியாளர்கள்.. Xiaomi India may lay off some employees as company plans to bring headcount below 1000 Xiomi Layoffs : அச்சச்சோ...கொத்து கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் Xiomi.. வேதனையில் இந்திய பணியாளர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/29/1c76c1f45d7ac4eacf10db5fd8a295a21688054572445572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Xiomi Layoffs : சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்த பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது 1,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறது.
பணிநீக்கங்கள்
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக ஊழியர்களுக்கு திடீரென ஒரு மெயில் அனுப்பி பல நிறுவனங்கள் அவர்களை வேலையில் இருந்து தூக்கியது. மேலும் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தக சந்தையை கொண்டுள்ள சியோமி நிறுவனம் தற்போது பணிநீக்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சியோமி பணிநீக்கம்
2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்துள்ளது சியோமி. மேலும், இனி வரும் காலங்களில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், அதில் இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் இருப்பதாக தெரிகிறது.
காரணம்
இந்தியாவில் செயல்பட்டு வரும் சியோமி நிறுவனம், அதன் நிர்வாக முடிவுகளை சீன நிர்வாகம்தான் எடுக்கிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக சியோமி நிறுவனம் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது. இதனால், தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிறுவனம் லாபகர சூழலுக்கு மாற்றுவதற்கும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியோமியின் மொத்த மொபைல் விற்பனை 50 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதேவேலை 80 மில்லியனாக இருந்தது. இதனால் சியோமியின் முதல் இடத்தை சாம்சாங் நிறுவனம் கைப்பற்றியது.
இதற்கிடையில், சியோமி இந்தியாவின் சந்தை நிலை இரண்டு காலாண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு சரிந்தது. இந்தியாவில் சியோமியின் சந்தைப் பங்கு 21 சதவீதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சாம்சாங் 19 சதவீதம், விவோ 14 சதவீதமாக இருந்தது. இருப்பினும், அடுத்த இரண்டு காலாண்டுகளில், சாம்சங் 20 சதவீத பங்குகளுடன் முன்னிலை பெற்றது. விவோ மற்றும் சியோமி 18 சதவீத பங்குகளுடன் இருந்தன. கடந்த காலாண்டில், சாம்சங் 20 சதவீத பங்கையும், விவோ 17 சதவீதத்தையும், சியோமி 16 சதவீதத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)