Work from Home: 50% ஊழியர்கள்தான்… ஒருவருஷம்தான்.. - 'வொர்க் ஃப்ரம் ஹோம்' செய்ய புதிய சட்டதிட்டம்!
வெறும் சம்பள செலவிலேயே பல நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வந்தன. அதுவே கொரோனா முடிந்த பின்னரும் பல நிறுவனங்கள் பின்பற்றும் விஷயமாக மாறிவிட்டது.
ஒர்க் ஃபிரம் ஹாம் அதாவது வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் (SEZ) உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஓராண்டு காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதுபோல 50% ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வசதியை அனுமதிக்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
சட்ட திருத்தம்
இந்த சட்ட மாற்றங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திட்டங்கள் 2006 - இல் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் படி புதிய ஒர்க் ஃப்ரம் ஹோம் விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலமாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' விதிகள் அமலாகும் எனக் கூறப்படுகிறது.
எதற்காக இந்த சட்டம்?
கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக கொரோனா தொற்றுநோய் தாக்கத்தால் ஊழியர்களை வீட்டில் வைத்தே வேலை வாங்கி பழகிய நிறுவனங்கள் பலவற்றுக்கு மின்சார கட்டணம், இன்டர்நெட் கட்டணம், வாடகை கட்டணம், போன்றவை குறைந்தது. அதனால் வெறும் சம்பள செலவிலேயே பல நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வந்தன. அதுவே கொரோனா முடிந்த பின்னரும் பல நிறுவனங்கள் பின்பற்றும் விஷயமாக மாறிவிட்டது. அது போகப்போக அரசு அமைத்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திவாலாக செய்யுமோ என்ற அச்சத்தை பொருளாதார நிபுணர்கள் முன்நிறுத்தினர். அதன் காரணமாக இந்த சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!
சட்டம் என்ன கூறுகிறது?
புதிதாக இணைக்கப்பட்டுள்ள சட்டத்தின் படி, வீட்டிலிருந்து வேலை என்பது 50 சதவீதம் ஊழியர்கள் வரை நீட்டிக்கப்படலாம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இது பொருந்தும். ஒருவேளை 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்க நிறுவனம் விரும்பினால், அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட்டு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
நீட்டிக்கப்படும் காலம்
மேலும் அதிகபட்சம் ஓராண்டு வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் காலத்தை நீட்டிக்கலாம். அதுவே மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றால் ஆணையர் அனுமதியுடன் இன்னொரு ஓராண்டுக்கு நீட்டிக்கலாம் அல்லது 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேவையான உபகரணங்கள்
அதேபோல வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கு தேவையான இன்டர்நெட் வசதி, கம்பியூட்டர், லேப்டாப், மொபைல், சிம் கார்டு போன்ற உபகரணஙகள் என அனைத்தையும் அந்தந்த நிறுவனங்கள் தான் செய்து தர வேண்டும். மேலும் அலுவலகம் சார்ந்த உபகரணம் ஏதாவது வீட்டிறகு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தின் அனுமதியை ஊழியர் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்