லிஃப்ட்டில் சிறுவனை கடித்த நாய்.. வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற உரிமையாளர் பெண்ணுக்கு அபராதம்..
லிஃப்ட்டில் சிறுவனை நாய் கடித்தபோதும், கண்டுகொள்ளாத பெண் மீது வழக்குப் பதவு!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் (ghaziabad) அருகில் இருந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட்டில் சிறுவனை ஒருவரின் வளர்ப்பு நாய் கடித்தது. இதைப் பார்த்த அந்த நாயினை வளர்ப்பவர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுவனின் தந்தை அந்தப் பெண்மணியிடம் உரையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. வீடியோவில், பார்க்கிங் பகுதியில், நாயுடன் நிற்கும் பெண்மனியிடம், சிறுவனின் தந்தை,” தன்னுடைய சிறுவனை நாய் கடித்துவிட்டது. நீங்கள் எந்த ஃபிளாட்டி இருக்கீங்கன்னு; சொல்லுங்கன்னு’ என்று கேட்கிறார். மேலும், அதில் பெண்ணிடம் நியாகம் கேட்கும்விதமாக பேசுகிறார் சிறுவனின் தந்தை. அந்தப் பெண் அவருக்கு எதுவும் பதிலளிக்காமல் நாயை அழைத்து கொண்டு செல்கிறார். இந்த வீடியோவையும் பலரும் பகிந்து வருகின்றனர்.
மேலும், காசியாபாத் நகராட்சி பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவனின் தந்தை Nandgram காவல் நிலையத்தில் நாய் வளர்க்கும் பெண் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், நாய் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அந்தப் பெண்ணுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Part 2: Argument between child's Father and dog's owner after dog bites the child in the lift. This video is form Charms Castle society in Raj Nagar Extension area of Ghaziabad. pic.twitter.com/G5hqQg10Xh
— Nikhil Choudhary (@NikhilCh_) September 6, 2022
அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர், தான் வளர்க்கும் செல்ல நாயுடன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிப்ட்டில் பயணம் செய்தார். அந்த நேரத்தில் சிறுவன் ஒருவனும் லிப்ட்டில் பயணம் செய்து தான் இறங்க வேண்டிய தளம் வந்ததும் கதவை நோக்கி செல்லத் தொடங்கியது. அப்போது அந்த நாய் சிறுவனை நோக்கி பாய்ந்து கடித்தது.
கடித்த நொடியில் சிறுவன் வலியில் கதறி கதவருகே ஒரு காலில் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்து கத்தினார். இதைபார்த்து கொண்டே இருந்த நாயின் உரிமையாளர் சிறிதும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தார். பின்னர் அவர் எதுவுமே நடக்காததுபோல நடந்து செல்கிறார். பிறகு லிட்ப்டுக்குள் ஏறும் ஒருவரிடம் நாய் கடித்தது குறித்து சிறுவன் கூறுகிறான்.
சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ட்விட்டரில் வெளியிடப்பட்ட காட்சிகளின்படி, இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை மாலை உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் சார்ம்ஸ் கேஸில் சொசைட்டியில் நடந்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் வீடியோ தற்போது 1024 லைக்குகள் மற்றும் 18.3k பார்வைகளுடன் வைரலாகி வருகிறது. நாயின் உரிமையாளர் நடந்துகொண்ட விதம் குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அந்த சம்பத்திற்கு நாயின் உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். இப்போது அவரு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.