மேலும் அறிய

வட மாநிலங்களை வாட்டும் குளிர்: ஹரியானாவில் பள்ளிகளுக்கு ஜனவரி 21 வரை விடுமுறை!

வட மாநிலங்களை வாட்டும் குளிரில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹரியானாவும் ஒன்று. இதனால் ஏற்கெனவே பள்ளிகளுக்கு 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விடுமுறை ஜனவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களை வாட்டும் குளிரில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹரியானாவும் ஒன்று. இதனால் ஏற்கெனவே பள்ளிகளுக்கு 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விடுமுறை ஜனவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உறையும் டெல்லி:

குளிர் காலம் அதன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சமீப நாட்களாக காலையில் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை வேலைக்கு செல்வோருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் இத்தகைய காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு டெல்லியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அயா நகரில் இன்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. சஃப்தர்ஜங்கில் 4.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தேசிய தலைநகரில் நிலவும் குளிர் அலையில் இருந்து விடுபடுவதற்காக டெல்லி மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் குளிர் அலை காரணமாக, வீடற்ற மக்களுக்காக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள வீடற்ற மக்கள், தேசிய தலைநகர் பகுதியில் நிலவும் குளிர் அலையில் இருந்து தப்பிக்க தங்குமிடங்களுக்கு சென்றனர். இந்த குறைந்த வெப்பநிலை, டெல்லியையே நடுங்க வைத்துள்ளது.

டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் விபின் ராய், இதுகுறித்து கூறுகையில், "எங்களிடம் 197 நிரந்தர தங்குமிடங்கள் உள்ளன. குளிர்காலத்தில் டெல்லியில் கிட்டத்தட்ட 250 கூடாரங்கள் போட்டோம். இப்போது, ​​செயல்பாட்டில் எங்களிடம் 190 கூடாரங்கள் உள்ளன. கூடுதலாக 50 கூடாரங்களை வைத்திருக்கிறோம். மெத்தைகள் மற்றும் போர்வைகள் தவிர குடியிருப்போருக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவும் வழங்குகிறோம்" என்றார்.

தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்போது கடும் குளிர் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மட்டும் கடும் குளிரால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!
விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ரூ.4,149 கோடியைத் தொட்ட ஏலக்காய் பிசினஸ் – எகிறிய கிலோ விலை!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget