மேலும் அறிய

ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறாரா விஜய்? பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த தவெக.. செம்ம மூவ்!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியான சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்திருப்பதன் மூலம் ராகுல் காந்தியுடன் விஜய் இணக்கமான உறவை பேண விரும்புகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பாக அதற்கு அச்சாரமிடும் ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசுக்கு நெருக்கடி தந்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு  நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறாரா விஜய்?

இப்படிப்பட்ட சூழலில், பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர். இதில், மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தீர்மானம்தான். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்ததோடு நிற்காமல் திமுக அரசுக்கும் நெருக்கடி தந்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பாக அதற்கு அச்சாரமிடும் ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி உள்ளார் விஜய். அந்த தீர்மானத்தில், "சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த தவெக:

ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்புலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். பீகாரில் நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட்டது. (நிதிஷ் குமார், தற்போது பாஜக கூட்டணியில் உள்ளார்)

இதேபோன்ற ஒரு ஆய்வை தமிழ்நாட்டில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தவெக. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியான சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்திருப்பதன் மூலம் ராகுல் காந்தியுடன் விஜய் இணக்கமான உறவை பேண விரும்புகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget