Karnataka High Court :கருப்பு நிறம் என்பதால் வெறுப்பதும் கொடுமைதான் - கர்நாடக உயர்நீதிமன்றம்
கணவனின் கருப்பு நிறத்தை குறிப்பிட்டு மனைவி வெறுப்பை உமிழ்ந்தால் அதுவும் கொடுமை செய்வதற்கு சமம் என்று கருத்து தெரிவித்து கர்நாடகா உயர்நீதிமன்றம். அந்த தம்பதிக்கு விவாகரத்து வழகியிருக்கிறது.
கணவனின் கருப்பு நிறத்தை குறிப்பிட்டு மனைவி வெறுப்பை உமிழ்ந்தால் அதுவும் கொடுமை செய்வதற்கு சமம் என்று கருத்து தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்றம். அந்த தம்பதிக்கு விவாகரத்து வழகியிருக்கிறது.
நடந்தது என்ன?
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2007-இல் திருமணமாகி ஒரு மகள் பிறந்த தம்பதியர் வாழ்வில் சில ஆண்டுகளாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கணவன் 2012-இல் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தை அணுக விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், இவரின் கோரிக்கையை நிராகரித்த குடும்ப நல நீதிமன்றம், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது.
குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து கோரியும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அப்போது, வழக்கு விசாரணையில் கணவன் - மனைவி இடையே எழுந்த பிரச்சனைக்கு காரணம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. கணவனின் கருப்பு நிறத்தை முன்வைத்து மனைவி தன்னிடம் வெறுப்புடன் நடந்து கொண்டதாக கணவன் முறையிட்டிருக்கிறார்.
கணவர் மீது பழி சுமத்துவதற்காக, கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக குடும்ப வன்முறையின் கீழ் மனைவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவர் திருமண உறவை மீறி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் மனைவி குற்றம் சாட்டியிருக்கிறார். விசாரணையில் இது பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.
கணவன் கருப்பாக இருப்பதாக வெறுத்து ஒத்துக்கியவர்,அவரை பிரிந்து தனது மகளுடன் தாய் வீட்டில் வசிக்க காரணமாக கணவன் மீது புகார் அளித்துள்ளார். இது வழக்கு விசாரணையில் தெளிவானது. மேலும், கணவனின் நிறத்தை முன்வைத்து மனைவி வெறுத்து வந்ததும் உறுதியானது. இப்படி செய்வது ’கொடுமை செய்தலில்’ அடங்கும் என வகைப்படுத்திய உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதோடு, இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது.
மேலும் வாசிக்க..
“உங்களுக்கு ராவணன் எவ்வளவோ பரவாயில்லை” - காரணத்தை சொல்லி மத்திய அரசை சாடிய ராகுல்காந்தி