மேலும் அறிய

JK Attack: பஹல்காம் கொடூர தாக்குதலின் முக்கிய புள்ளி..யார் இந்த சைஃபுல்லா காலித்?

Jammu Kashmir Terror Attack Mastermind: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித், 2026க்குள் ஜம்மு காஷ்மீரை திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது, நேற்று பயங்கரவாதிகள் நடத்தினர். இத்தகைய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தபட்சம் 27 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல்களானது நாட்டையை கவலையடையச் செய்துள்ளது. மேலும், இத்தாக்குதல்களுக்கு அமெரிக்கா , ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அயல்நாட்டு தலைவர்களும் கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சைஃபுல்லா காலித் யார்?

பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதலின் மூளையாக சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சைஃபுல்லா காலித் முன்னெடுத்து நடத்தியதாக கூறப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி. லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனர் ஹபீஸ் சயீதுடன்,நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சைஃபுல்லா காலித், சைஃபுல்லா சாஜித் ஜாட், அலி, ஹபிபுல்லா மற்றும் நௌமன் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படுகிறார். அவர் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மற்றும் துணைத் தலைவர். உளவுத்துறையின்படி, அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மிகவும் நம்பிக்கை உரியவர் என அறியப்படுகிறார். அவருக்கு 40 முதல் 45 வயது இருக்கும் என்றும், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read: பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!

ஹபீஸ் சயீத்தின் கீழ் பயிற்சி: 

சைஃபுல்லா 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்தார். பாகிஸ்தானின் முரிட்கேயில் உள்ள எல்.இ.டி முகாமில் பயிற்சி பெற்றார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ரஜோரி பகுதியில் எல்.இ.டி.யின் பயங்கரவாத நடவடிக்கைகளின் முக்கிய மூளையாக சைஃபுல்லா இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கோட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய போராளிக் குழுவான குய்ரட்டா டேட்ஸின் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகள், இங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. 

லஷ்கர்-இ-தொய்பாவின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றினார்

சைஃபுல்லா, எதிர்ப்பு முன்னணி (TRF) மற்றும் மக்கள் பாசிச எதிர்ப்புப் படை (PAFF) ஆகிய பயங்கரவாத அமைப்பை நிறுவியவர். மேலும்,  பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள லஷ்கர்-உத்-தாவாவின் தலைமையகத்தின் தலைவராகவும் சைஃபுல்லா காலித் உள்ளார். மத்திய பஞ்சாப் மாகாணத்திற்கான ஜமாத்-உத்-தாவா (JUD) ஒருங்கிணைப்புக் குழுவில் அவர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், பயங்கரவாத செயல்களுக்காக, சைஃபுல்லாவின் TRF அமைப்பை கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அரசு தடைசெய்ததும் குறிப்பிடத்தக்கது.

2026க்குள் காஷ்மீரைக் கைப்பற்றத் திட்டமிடப்பட்டுள்ளது:

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித், இத்தாக்குதலை நடத்த ஐந்து முதல் ஆறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சைஃபுல்லா காலித் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கங்கன்பூருக்குச் சென்றிருந்தார். அந்த இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு பெரிய பட்டாலியன் உள்ளது. கைபர் பக்துன்க்வாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், சைஃபுல்லா கசூரி இந்தியாவுக்கு எதிராக ஒரு  உரையை நிகழ்த்தினார். "இன்று பிப்ரவரி 2, 2025 என்று நான் உறுதியளிக்கிறேன். பிப்ரவரி 2, 2026க்குள் காஷ்மீரைக் கைப்பற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். வரும் நாட்களில், நமது முஜாஹிதீன்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவார்கள்" என்று அவர் ஒரு உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
மைலேஜ் அதிகரிக்க வேண்டுமா? இதை தவறாமல் பண்ணுங்க.. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் 5 வழிகள்!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
சபரிமலை முதல் மசூதி வரை: பெண்களின் உரிமைக்கான உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணை நாளை! முக்கிய தீர்ப்பு?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
TN RAIN ALERT: மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
மீண்டும் மழையா.? தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
Trump Vs Iran: தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
தலைக்கு தில்ல பாத்தியா.! ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் 10 நிபந்தனைகள் விதித்த ஈரான்; அது என்ன.?
Embed widget