மேலும் அறிய

Ajit Pawar plane crash: அஜித்பவார் விமானத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன.? விமானி சொன்ன இறுதி வார்த்தை.?

Ajit Pawar plane crash: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளும், விமானி கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் விமான விபத்து

இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார் பயணம் செய்த விமான விபத்து தான். பிப்ரவரி 5 ஆம் தேதி  அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து மும்பையில் இருந்து பரிஷத் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க அஜித் பவார் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சரியாக காலை 8.45 மணியளவில் நடைபெற்ற விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் விமான விபத்து நடைபெறுவதற்கு முன்பாக என்ன நடந்தது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து நடைபெற்றது எப்படி.?

VSR ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் லியர்ஜெட் 45 என்ற வாடகை விமானம், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அஜித் பவார் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். இன்று காலை பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் இருந்து  1,770 மீட்டர் தூரத்தில் விமானம் நெருங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அஜித் பவார் உயிரிழந்துள்ள நிலையில், விமான விபத்து தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், விமானி அறையில் நடந்த உரையாடல்,  தகவல் தொடர்பு, விமானத் தரவு மற்றும் ஓடுபாதை என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்  விசாரணையை தொடங்கியுள்ளது.  அதே நேரம் விமான விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. 

 

விமானி சொன்ன கடைசி வார்த்தை

விமான கண்காணிப்பு தரவுகளின்படி, மும்பையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்ட விமானம்  காலை 8:45 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்து எரிந்ததாக பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. விமானம் ஓடுபாதைக்கு அருகில் வந்த போது விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் (ATC) பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இறுதி நேரத்தில் எந்த அபாய அழைப்பும் விமானி (SOS) வெளிப்படுத்தவில்லையெனவும் கூறப்படுகிறது. மேலும் விமானம் தரையிறங்க முயற்சிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு, ஓடுபாதைக்கு அருகில் மோசமான வானிலையாக இருப்பதாகவும், தெளிவற்ற தன்மை இருப்பதாக விமானி கூறியதாகக் கூறப்படுகிறது, 

விபத்திற்கு காரணம் என்ன.?

முதல் கட்ட விசாரணையின் படி, இயந்திர செயலிழப்பு, மோசமான வானிலைக்கான ஆரம்ப அறிகுறிகளை DGCA விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.  கடைசி நேரத்தில் ATC-யிடமிருந்து எந்த மேடே அழைப்பும் வரவில்லை, ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget