மேலும் அறிய

"போலீஸ்க்கு ஒரு வாரம் டைம்.. இல்லனா" கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கில் மம்தா தடாலடி!

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கின் குற்றவாளிகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்யவில்லை என்றால் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. 

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கம் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து முடிப்பதற்கு மாநில காவல்துறைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நேரம் தந்துள்ளதாகவும் அதற்குள் விசாரணையை முடிக்கவில்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால், அனைவரையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்போம்" என்றார்.

மம்தா சொன்னது என்ன? சிபிஐயை நக்கலடித்து பேசிய அவர், "வழக்கை முடிக்கும் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் நாங்கள் ஒப்படைப்போம்" என்றார். காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு குறித்து பேசிய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், "நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இன்னும் நான்கைந்து நாட்களில் வேறு குற்றவாளிகள் யாரேனு் இருந்தால் அவர்களை கைது செய்வோம். உதவி எண்கள் அறிவித்துள்ளோம். மருத்துவர்கள் தொலைபேசியில் (மற்றும்) தகவல் தரலாம். அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் தகவல்கள் தரலாம்.

நாங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தொடர்ந்து தொடர்பில் இருப்போம். வழக்கின் முன்னேற்றத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். அதன் பிறகும் குடும்பம் திருப்தியடையவில்லை என்றால், மேடம் (செல்வி பானர்ஜி) என்ன சொன்னாரோ அது நடக்கும்" என்றார்.

ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் கொல்லப்பட்ட பெண், படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர், நேற்றுமுன்தினம் (வியாழன்) இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.

பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget