Watch Video: மின்னல் வேக லாரி! வீசப்பட்ட கடத்தல் மாடுகள்.. 22 கிமீ துரத்திய போலீஸ்.. பரபர சேசிங் காட்சிகள்!
ஐந்து நபர்கள் லாரியில் மாடுகளை திருடி கொண்டு தப்பித்துச் செல்லும்போது,குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் பிடித்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருட்டு,கொள்ளை அதை தொடர்ந்து துரத்தல் காட்சிகள் பொதுவாக திரைப்படங்களில்தான் பார்த்திருப்போம். ஆனால், டெல்லி அருகே உள்ள குர்கிராமில்(Gurugram.) 5 கொள்ளையர்களை சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் பிடித்துள்ளனர். ஐந்து நபர்கள் லாரியில் மாடுகளை திருடி கொண்டு தப்பித்துச் செல்லும்போது,குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று போலீசார் பிடித்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Earlier today, Gau Rakshak's caught "Cattle Smugglers" in #Gurugram, smugglers threw the cow from running vehicle. pic.twitter.com/7eXyba1PRj
— Nikhil Choudhary (@NikhilCh_) April 9, 2022
என்ன நடந்தது?
ஐந்து திருடர்கள் ஒரு லாரியில் மாடுகளை ஏற்றுகின்றர். இதையறிந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். இதனை அவதானித்த திருடர்கள் வாகனத்தை மேலும் வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அவர்களிடம் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. இருப்பினும், போலீசார் வருவதை கவனித்த குற்றவாளிகள், ஓடும் வாகனத்தில் இருந்து மாடுகளை கீழே தள்ளிவிட்டனர்.
டெல்லி எல்லையில் இருந்து குர்கிராமுக்கு வந்து கொண்டிருந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது கொள்ளையர்கள் வேகமாக ஓடிவிட்டனர். அவர்களை துரத்திச் சென்ற போலீசார், இறுதியில், போலீசார் கொள்ளையர்களின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
"இந்த மாடு கடத்தல்காரர்களை 22 கிமீ துரத்தி சென்று பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த வாகனத்தில் இருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டன.இவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர்.” என்று பசு பாதுகாவலர் சங்கத்தினை சேர்ந்த அசோக் கூறியுள்ளார்.
குர்கிராமில் பசு கடத்தல்காரர்கள் பயங்கரத்தை பரப்புவது இது முதல் முறையல்ல. ஹரியானா அரசு பசுக் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது மற்றும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு ஆணையத்தையும் அமைத்துள்ளது. இருந்தபோதிலும், மாநிலத்தில் பசுக் கடத்தல் அதிகரித்து வருகிறது.
கிண்டி: சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சூதாட்ட கிளப்பில் போலீசார் கட்டி புரண்டு மோதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்