Watch Video: சத்துணவு முட்டைக்கு எதிர்ப்பு: லிங்காயத் தலைவர்களை சாடிய பள்ளிச் சிறுமி!
ஏழைகளின் அவலநிலை உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் பசியைப் போக்க உங்கள் மடத்திற்கு வருகிறோம்... எதற்கும் பயமுமில்லை - பள்ளிச் சிறுமி
கர்நாடாகாவில், பள்ளி மாணாக்கர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க முட்டை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மடத் தலைவர்கள் பள்ளிச் சிறுமி கடுமையாக சாடும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ:
English subtitles, School girl from Gangavathi in Koppal district is heard lashing out at the seers for attempting to deny nutritious food to poor children. Seers belonging to Lingayat & the Brahmin community opposed the move to provide eggs to students along with mid day meals. https://t.co/MtYGSlm0Ii pic.twitter.com/XAikN86QKa
— Mohammed Zubair (@zoo_bear) December 12, 2021
ஊட்டச்சத்து குறைபாடு:
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி, கர்நாடகாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சதவீதம் 35.4 ஆகவும், வீணாதல் சதவீதம் 19.5 ஆகவும், குறைந்த எடையிலான குழந்தைகளின் சதவீதம் 32.9 ஆகவும், தீவிர வீணாதல் சதவீதம் 8.4 ஆகவும் உள்ளது.
இதனடிப்படையில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை வழங்கிட கர்நாடாக அரசு முடிவெடுத்தது. முதற்கட்டமாக, பல்லாரி, பீதர், குல்பர்கா,கொப்பள், ராய்ச்சூர், விஜயபுரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் 42 வேக வைத்த முட்டைகள் (அல்லது வாழைப்பழம்) வழங்கப்படும் என்று அறிவித்தது.
Eggs in midday meal scheme for children has become a talking point in Karnataka.
— Deepak Bopanna (@dpkBopanna) December 10, 2021
Two seers in Karnataka have objected to it. The Pejawar seer says this inclusion cloud bring in religious differences among kids.
BJP MP @ShobhaBJP has asked govt to reconsider.
What's ur opinion? pic.twitter.com/Qft5qRjZKz
இந்நிலையில், பள்ளிகளில் முட்டை வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று கர்நாடகா மடத் தலைவர்கள் அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வந்தனர். அனைத்து தரப்பு மாணவர்களும் ஏற்றுக் கொள்ளும் உணவை வழங்கிட வேண்டும் என்றும் முட்டைகளை உண்ண யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பெஜாவர, லிங்காயத் போன்ற மடத்தின் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக, முட்டை வழங்கிடும் திட்டத்தில் இருந்து அம்மாநில அரசு பின்வாங்கத் தொடங்கியது. முட்டைகளுக்கு மாற்றாக ஊட்டச்சத்துமிக்க இதர உணவுகளை வழங்க அம்மாநில அரசு யோசித்து வருகிறது.
பள்ளிச் சிறுமி ஆவேசம்:
இந்நிலையில், கொப்பள் மாவட்டம் கங்காவதி நகர அரசுப் பள்ளியில் படித்து வரும் சிறுமி, முட்டை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மடத் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
வீடியோவில், " உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இது போன்று நடந்தால், நீங்கள் ஏற்றக் கொண்டிருப்பீர்களா? எங்களுக்கு வேக வைத்த முட்டைகளும் வேண்டும், வாழைப்பழமும் வேண்டும். இரண்டில், ஒன்று தான் என முடிவெடுக்க நீங்கள் யார்? நான், வேண்டுமானாலும் உங்கள் மடத்தில் வந்து உணவருந்தவா?
நாங்கள் உங்கள் மடத்திற்கு காணிக்கை வழங்க வில்லையா? எங்கள் பணத்தைத் தூக்கி எறியுங்கள்? அல்லது எங்களிடம் திருப்பிக் கொடுங்கள். நல்ல சத்துமிக்க உணவை பெற்றுக் கொள்கிறோம்.
ஏழைகளின் அவலநிலை உங்களுக்கு புரிந்திருக்க் வாய்ப்பில்லை. எங்கள் பசியைப் போக்க உங்கள் மடத்திற்கு வருகிறோம்... எதற்கும் பயமுமில்லை. எங்கள் வட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் உங்கள் மடத்திற்கு வந்தால் உங்கள் மடத்தின் நிலை என்னவாகும்? " என்று உணர்வுப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
JNU PhD results: ஜே.என்.யூ., பி.எச்.டி நேர்முகத் தேர்வில் பாகுபாடு - மாணவ அமைப்பு குற்றச்சாட்டு!