Watch Video : சுற்றுச்சுவர் மீது மோதிய பேருந்து..! 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..
Watch Video : மகாராஷ்டிராவில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Watch Video : மகாராஷ்டிராவில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹர் என்ற இடத்தில் பஸ் டிப்போவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் அதே இடத்தில் இருந்த 15 வயது சிறுவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்து ஒன்று பேருந்து டிப்போவில் இருந்து வர முயன்றது. அப்போது, அந்த இடத்தில் உள்ள சுற்றுச்சுவர் அருகில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கிச் இயக்கினர். பின்நோக்கி பேருந்தை இயக்கியபோது சுற்றுச்சுவரில் மோதியது. பின்பு, சுவரின் ஒரு பகுதி அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது. அந்த இடத்தில் உள்ள மக்கள் அவர்களை மீட்க விரைந்தனர்.
அப்போது அந்த இடத்தில் 11 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீது விழுந்தது. அதில் 11 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்த இடத்தில் 15 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த நேரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Maharashtra: Palghar boy dies after compound wall of bus depot falls on him, another injured pic.twitter.com/YBmLOAYxnl
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) November 12, 2022
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ”சிறுவர்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் இருந்து ஜவ்ஹருக்கு வந்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த 15 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காயமடைந்த சிறுவன் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். உயிரிழந்த 11 வயது சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் படிக்க
Amit Shah : "மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் பயிற்றுவிக்க வேண்டும்" - அமித்ஷா பேச்சு..!
Himachal Election 2022: இந்தியாவின் முதல் வாக்காளரை கவுரவித்த கூகுள்...! வைரலாகும் வீடியோ இதோ...