watch video :பஞ்சாப் விரைவுச்சாலை : ஆசையாக கட்டிய 1.5 கோடி கனவு இல்லம் ! 500 அடிக்கு பின்னோக்கி நகர்த்தும் விவசாயி !
"இந்த வீட்டைக் கட்ட எனக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ரூ.1.5 கோடி ஆனது. இது எனது கனவுத் திட்டம், நான் வேறு வீடு கட்ட விரும்பவில்லை"
விரைவுச்சாலை அமைப்பதற்காக விவசாயி ஆசையகா கட்டிய இரண்டடுக்கு மாடி வீட்டை 500 அடி பின்னால் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கனவு இல்லம் :
பஞ்சாபின் மாநிலம் சங்ரூரைச் அடுத்த ரோஷன்வாலா கிராமத்தை சேர்ந்தவர் சுக்விந்தர் சிங் சுகி. இவர் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆசை ஆசையாக கனவு இல்லம் ஒன்றை கட்டியிருக்கிறார். அவரது வயல் பகுதியில் அமைந்துள்ள சுக்விந்தர் சிங் சுகியின் வீடு, டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருகிறது. விரைவுச்சாலையானது பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் மையத்தின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விரைவுச்சாலை பணி முடிந்தவுடன் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அதி விரைவு போக்குவரத்தை இந்த சாலை இணைக்கும் என கூறப்படுகிறது.
Watch: Punjab Farmer Wants To Move His ₹ 1.5 Crore House By 500 Feet pic.twitter.com/KOEVVBqdRj
— C M JAIN (@CMJainLive) August 20, 2022
வீட்டை இடிக்காமல் நகர்த்தும் விவசாயி :
ஆரம்பத்தில் இந்த வீட்டை நகர்த்த மறுத்துள்ளார் சுக்விந்தர் சிங் சுகி . பின்னர் பஞ்சாப் அரசு உரிய இழப்பீடு வழங்குகிறோம் என கூறியதும் தனது வீட்டை இடிக்காமல் , 500 அடி பின்னோக்கி நகர்த்த முடிவு செய்துள்ளார். எனவே கிராமத்தில் உள்ள சில கட்டுமான தொழிலாளர்களின் உதவியுடன் வீட்டை 250 அடிக்கு நகர்த்திவிட்டார். 500 அடி பின்னோக்கி நகர்த்துவதற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. இது குறித்து பேசிய சுக்விந்தர் சிங் சுகி “"இந்த வீட்டைக் கட்ட எனக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ₹ 1.5 கோடி ஆனது. இது எனது கனவுத் திட்டம், நான் வேறு வீடு கட்ட விரும்பவில்லை" என்றார்.டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா தேசிய நெடுஞ்சாலை ஒரு லட்சிய திட்டமாகும், இது முடிந்ததும், டெல்லியிலிருந்து பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்கும் பயணிகளின் நேரம், பணம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மிச்சப்படுத்தும்" என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி வீட்டை இடிக்காமல் நகர்த்தலாம் :
முன்பெல்லாம் வீட்டை மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றால் இடிப்பதோ அல்லது இடம்பெயருதல் மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது . ஆனால் தற்போது ஹவுஸ் லிஃப்டிங்,ஹவுஸ் ஜாக்கிங், பார்ன் ஜாக்கிங், ஃபீல்டிங் ஜாக்கி என பல தொழில்நுட்ப உபகரணங்கள் வந்துவிட்டன.ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக் மூலம் ஒரு கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து உயர்த்தும் செயல் முறை இப்பொழுது பிரபலமாகி வருகின்றது.கட்டிடங்களின் அளவைப் பொருத்து அதற்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஸ்க்ரூக்கள் மற்றும் ஜாக்கிகளின் எண்ணிக்கையும் மாறுபடுகின்றன. யூனிஃபார்ம் டிஸ்ட்ரிபியூட்டட் லோட் (UDI) மற்றும் பாயின்ட் லோட் ஜாக்கிகள் இவ்வகை வேலைப்பாடுகளில் பெரிதும் உதவியாக இருக்கின்றன.