Watch Video: நிகழ்ச்சியில் தண்ணீர் கேட்ட அதிகாரி; ஓடிச் சென்று உதவிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. குவியும் பாராட்டு!
நிகழ்ச்சியில், மேடை பேச்சின் நடுவே அதிகாரி ஒருவர் தண்ணீர் கேட்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் மேஜைமீது வைத்திருந்த குடிநீரை அவருக்கு வழங்கியது இணையத்தில் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited)நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் நடுவே அந்நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் தண்ணீர் கேட்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் மேஜைமீது வைத்திருந்த குடிநீரை அவருக்கு வழங்கியது இணையத்தில் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited,), எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி மும்பை உள்ள ஒரு ஹோட்டலில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின்போது, மேடை பேச்சின் நடுவே என்.எஸ்.டி.எல். – இன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, அங்கிருந்த ஒருவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டிருக்கிரார். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தனது மேஜை மீது இருந்த குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். இதனை கண்டு அரங்கத்தினர் அசந்து அவரின் எளிமையான செயலை பாராட்டினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் பாரட்டினை பெற்று வருகிறது.
மும்பையில் என்.எஸ்.டி.எல்., வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாணவர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தையும், (NSDL investor awareness programme for students - Market ka Eklavya), என்.எஸ்.டி.எல்லின் 25 ஆண்டு கால பயணத்தை சிறப்பிக்கும் அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.
That's the moment sir..
— Ankur Chaturvedi (@ChaturAnky) May 7, 2022
#Respect pic.twitter.com/YZC5bg80cZ
முன்னதாக என்.எஸ்.டி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசியதால் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிருந்த ஒருவரிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். இதை கவனித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குடிநீரை கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த பத்மஜா, அவரைப் பாராட்டி அன்புடன் நன்றி கூறினார். இதை அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர்.
இதை மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிந்து, நிதியமைச்சரின் எளிமையை பாராட்டி உள்ளார்.
This graceful gesture by FM Smt. @nsitharaman ji reflects her large heartedness, humility and core values.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) May 8, 2022
A heart warming video on the internet today. pic.twitter.com/isyfx98Ve8
பங்குச்சந்தை சார்ந்த பொதுத் துறை நிறுவனம் என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம். நூற்றாண்டுக்கும் மேலான துடிப்பான பங்குச்சந்தையை கொண்டிருக்கும் இந்தியா, காகித அடிப்படையிலான பங்கு வர்த்தகத்தை செய்து வந்தது. 1996ல் என்.எஸ்.டி.எல்., ஆகஸ்டில் உருவாக்கப்பட்டு அந்த சிக்கலான வர்த்தக முறை மாற்றம் காண துவங்கியது. என்.எஸ்.டி.எல்., உலகின் மிகப்பெரிய பங்குகள் வைப்பு நிறுவனங்களில் ஒன்று.