Meghalaya, Odisha, UP Polling: ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மேகாலயாவில் நடக்கும் இடைத்தேர்தல்.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..
உத்தர பிரதேசம், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், பஞ்சாபில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்வார் மற்றும் சன்பே, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் மேகாலயாவின் சோஹியோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும், பஞ்சாபில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல்நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் சுவார் மற்றும் சான்பே தொகுதி, ஒடிசாவின் ஜார்சுகுடா, மேகாலயாவின் சோஹியோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி உயிரிழந்ததை அடுத்து ஜலந்தர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜலந்தரின் பில்லூரில் அக்கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக மறைந்த சந்தோக் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர், முன்னாள் எம்எல்ஏ சுஷில் ரிங்கு, (காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்), பட்டியலினத்தை சேர்ந்த இந்தர் இக்பால் சிங் அத்வால் ஆகியோர் இடையே போட்டி தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் சுவார் மற்றும் சன்பே தொகுதிகளில் ஆளும் கட்சியான பா.ஜ.க விற்கும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு சட்டசபையின் அரசியலமைப்பில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் சான்பே தொகுதியில் மட்டும் தனது வேட்பாளாரை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில், சோஹியோங் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, அங்கு பிப்ரவரி 27 ஆம் தேதி மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக UDP வேட்பாளர் HDR லிங்டோவின் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டது. சோஹியோங் தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.