மேலும் அறிய

வி.ஐ.டி. போபால்: பாரம்பரியமும், தொழில்நுட்பமும் சங்கமித்த 'சன்ஸ்கிருதி சமாகம்' - பிரமிக்க வைத்த நிகழ்வு!

சன்ஸ்கிருதி சமாகம்" பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.

"சன்ஸ்கிருதி சமாகம்" - பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த வரலாற்று விழாவை வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது

இந்தியாவின் பண்பாட்டு பெருமையையும் நவீன தொழில்நுட்ப புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த ஒரு வரலாற்று நிகழ்வாக, வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகத்தின் "சன்ஸ்கிருதி சமாகம்" எனும் தனித்துவமான கலாச்சார விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது.

இதுவரை நடைபெறாத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த விழா, அக்டோபர் 11, சனிக்கிழமை அன்று, மத்தியப் பிரதேசத்தில் போபாலின் ஆவிரிதி, இந்திரா காந்தி ராஷ்ட்ரிய மனவ் சங்க்ரஹாலயா, ஷ்யாம்லா ஹில்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் பத்ம விபூஷண் டாக்டர் சோனல் மான்சிங், ஜாசு கான், அனன்யா சக்ரவர்த்தி, மற்றும் வர்ஷிணி சங்கர் ஆகியோர் தங்கள் கலைநிகழ்ச்சிகளின் மூலம் இந்திய பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர்.

மாலையில் முக்கிய அம்சமாக, மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடம் முழுவதும் பசுமையும் மரங்களும் மற்றும் மலர்களால் எழில் கொண்டு சூழப்பட்டு அழகாக காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஏரிக்கரையைச் சுற்றி வானில் ஒளி மற்றும்  பல்வேறு விதமான காட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கினர். இதில் வியத்தகு காட்சிகளாக இந்திய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவம், மத்திய பிரதேசத்தின் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களின் உருவம், மற்றும் மாநிலத்தின் ஆட்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி முக்கிய வளர்ச்சி முயற்சிகள் போன்றவற்றை காட்சிப்படுத்தின.

இந்த ட்ரோன் நிகழ்ச்சி, வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நாட்டின் சுயநிறைவு நோக்கத்துடன் இணைந்து, எதிர்காலத்துக்கு தயாரான, தொழில்நுட்ப திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது. 

இந்நிகழ்வை, வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத் தலைவர் திரு. சங்கர் விசுவநாதன், அறக்கட்டளை உறுப்பினர் திருமதி ரமணி பாலசுந்தரம், மற்றும் புதுமணத்தம்பதிகள் காதம்பரி-விசுவநாதன் (உதவி துணைத் தலைவர், வி.ஐ.டி.) மற்றும் டாக்டர் ஏ. ஸ்ரவண் கிருஷ்ணா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.மாநிலம் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், நிர்வாக மற்றும் கல்வித்துறையின் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

"சன்ஸ்கிருதி சமாகம்” மத்தியப் பிரதேசத்திற்கான ஒரு பண்பாட்டு மைல்கல் நிகழ்வாக அமைந்தது - பாரம்பரியத்தின் ஆன்மாவையும், தொழில்நுட்பத்தின் ஒளியையும் ஒருங்கிணைத்து மறக்க முடியாத ஒரு இரவை உருவாக்கியது. இந்தியாவின் வேர்களையும் அதன் எதிர்கால கனவுகளையும் இணைக்கும் பாலமாக, வி.ஐ.டி. போபால் மீண்டும் ஒரு முறை தன் முன்னணி தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியது.

சன்ஸ்கிருதி சமாகம்" பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த இந்த வரலாற்று விழாவில் முக்கிய விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget