Viral Video: மணமகளை தூக்க முயன்ற நண்பன்.. மாப்பிள்ளை என்ன செஞ்சார் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க..
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமேடையில் மணமகள் கையைப் பிடித்து இழுத்த தோழனிடமிருந்து, மணமகளை மணமகன் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Viral Video: மணமகளை தூக்க முயன்ற நண்பன்.. மாப்பிள்ளை என்ன செஞ்சார் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க.. Viral Video: Man Tries To Take Away Bride From Stage, Then Groom Does This Romantic Thing. Watch Viral Video: மணமகளை தூக்க முயன்ற நண்பன்.. மாப்பிள்ளை என்ன செஞ்சார் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/08/b61d861ff28a1ae7aebb1f83f47ea8dd1657293949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமேடையில் மணமகள் கையைப் பிடித்து இழுத்த தோழனிடமிருந்து, மணமகளை, மணமகன் மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணங்கள் என்றாலே மகிழ்ச்சி நிறைந்தவை தான். குறிப்பாக இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் மிகவும் வண்ணமயமானவை. இந்தியாவே முழுக்க முழுக்க வண்ணமயமான மக்களை உள்ளடக்கியது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் திருமணங்கள் நடக்கும் முறை வித்தியாசமானது வண்ணமயமானது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணங்களின் முறையும் வெவ்வேறானது தான். திருமணங்களில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், மகிழ்ச்சியானது தான். அவ்வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு திருமணத்தில் நடந்துள்ள ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பஞ்சாப் மாநிலத்தில், நடைபெற்றுள்ள திருமணம் ஒன்றில், மணமேடையில், மணமகளை மணமகளின் தோழனும், மணமகனும் ஆளுக்கு ஒரு புறமாக இழுத்து நின்றுகொண்டு இருக்கின்றனர். இருவரும் மணமகளின் கையினை இழுத்துக் கொண்டு இருக்கின்றனர். இறுதியில், மணமகன், மணமகளை தூக்கிக் கொண்டு செல்வார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இரண்டு இலட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 30 ஆயிரம் பேர் இந்த வீடியோவைப் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தும் வருகினறனர். தோழருக்கும் பார்ட்னருக்கும் இடையில் மாட்டிக் கொண்ட மணமகளை, இறுதியில் மணமகன் தூக்கிச் சென்றாலும், மணமகள் தன்னுடைய தோழனை நோக்கி வருவது, அவர்களின் தோழமையினை கொண்டாடுவதாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)