வைரல் வீடியோ.. பாம்புக்கு நெற்றி முத்தமிட்டு பயமுறுத்திய வாவா சுரேஷ்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பாம்பென்றால் அத்துடன் ஒரு செல்ஃபி படம் பிடி என்பது புதுமொழி என ஆக்கியுள்ளனர் பாம்பு மீட்பர்கள். அண்மைக்காலமாக பாம்பு மீட்பர்கள் பாம்பைப் பிடிப்பதும் பின்னர் அத்துடன் படம் பிடிப்பது, கடி வாங்குவதும் வழக்கமான கதையாகி வருகிறது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் பாம்பென்றால் அத்துடன் ஒரு செல்ஃபி படம் பிடி என்பது புதுமொழி என ஆக்கியுள்ளனர் பாம்பு மீட்பர்கள். அண்மைக்காலமாக பாம்பு மீட்பர்கள் பாம்பைப் பிடிப்பதும் பின்னர் அத்துடன் படம் பிடிப்பது, கடி வாங்குவதும் வழக்கமான கதையாகி வருகிறது.
அப்படியொரு சம்பவத்தின் காட்சிகள் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நெட்டிசன் ஒருவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் அந்த நபர் ஒரு ராஜ நாகத்தைப் பின் தொடர்கிறார்.அதனை முத்தமிட முயற்சிக்கிறார். இறுதியில் அதன் நெற்றியில் முத்தமும் இடுகிறார். காண்போரை அந்த வீடியோ பதறச் செய்கிறது. அவர் வேறு யாருமில்லை கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்பு மீட்பர் வா வா சுரேஷ். அவர் இதுவரை 38000 பாம்புகளை மீட்டுள்ளார். 3000 முறை பாம்புக் கடியும் வாங்கியுள்ளார் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அண்மையில் அவர் பாம்பு மீட்கும்போது அது அவரது தொடையில் கடித்தது. இதனால் அவர் அபாயகட்டத்திற்குச் சென்று உயிர் பிழைத்துத் திரும்பினார். அப்போதே பாம்பு மீட்பர்கள் பற்றி நிறைய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. விவாதப் பொருளாகவும் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில் ஸ்நேக் கிங் என்ற கேப்ஷன் வேறு ஓடுகிறது. அந்த வீடியோவை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதில் ஒரு பதிவர் இது ரொம்பவும் ஆபத்தானது என்று அச்சத்தை பகிர்ந்துள்ளார். இன்னொருவர் லவ் இட் என்று ரசனையைக் கூறியுள்ளார்.
View this post on Instagram
வைரலான வீடியோ:
முன்பு சுரேஷ் கடைசியாக பாம்புக் கடி வாங்கிய காட்சி இணையத்தில் வைரலானது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் மீட்புப் பணியின் போது பாம்பு கடித்ததில் பிரபல பாம்புக் கையாளும் மீட்பருமான வாவா சுரேஷ் (47) திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறிச்சி கிராமத்தில் சுரேஷை பாம்பை பிடித்துக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர் தனது செல்போனில் இதனை வீடியோவாக எடுத்தார். பாம்பை, சுரேஷ் ஒரு பைக்குள் வைத்தபோது, அது அவரது காலுக்கு அருகில் தவழ்ந்து முழங்காலுக்கு மேல் கடித்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
வா வா சுரேஷ் குறித்து அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,“வருந்துகிறேன். கடைசியாக நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். திருவனந்தபுரம் மக்களுக்கு அவரது துணிச்சலான சேவைகள் தொடர கடவுள் அவரை காப்பாற்றட்டும்” என்று பதிவிட்டார்.வா வா சுரேஷுக்கு அரசு சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்ட போது சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.இது முறையாக பயிற்சி பெறாத பாம்பு மீட்பர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தனர்.