Video:குழந்தையை கிணற்றுக்குள் தொங்கவிட்டு ரீல்ஸ் எடுத்த பெண்.! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.!
சில வினாடிகள் ரீல்ஸ் வீடியோவுக்காக , தனது உயிர் மற்றும் குழந்தையின் உயிரை பணயம் வைத்து வீடியோ எடுத்த பெண்ணுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கிணற்றின் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், குழந்தையை அலட்சியமாக ஒரு கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தையின் உயிரை பணயம் வைத்து வீடியோ எடுக்கப்பட்டமைக்கு , பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்து ரீல்ஸ்:
குழந்தையின் உயிரை பணயம் வைத்து , ஒரு பெண் ரீல்ஸ் எடுக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரீல்ஸ் மோகத்தின் விளைவாக, ஒரு பெண் தனது உயிரை மட்டுமல்ல, ஒரு குழந்தையின் உயிரையும் பணயம் வைப்பதை பார்க்க முடிகிறது. அவர் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும் சிறுவனை கவனக்குறைவாக பிடித்துக் கொண்டே கேமரா முன்பு போஸ் கொடுக்கிறார்.
அவர் , பாடலுக்கு ஏற்ப கைகளை அங்கும் இங்குமா அசைக்கிறார். குழந்தையானது, அவரது ஒரு காலில் ஒட்டிக் கொண்டு இருப்பதையும், ஒரு கையால் பிடிக்கப்பட்டிருப்பதையும் வீடீயோவில் காணலாம், அதே நேரத்தில் சிறுவனின் உடல் கிணற்றுக்குள் தொங்கி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 sec #Reels is more important than the child's life.pic.twitter.com/FRg5TUbSAq
— ShoneeKapoor (@ShoneeKapoor) September 19, 2024
வலுக்கும் கண்டனம்:
சில வினாடிகள் ரீல்ஸ்க்காக, அவரது உயிரையும் மட்டுமல்லாமல் குழந்தையின் உயிரையும் பணயம் வைத்து, அந்தப் பெண் ஆபத்தை மறந்துவிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பார்வையாளர்களிடம் இருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பலரும் , இந்த ஆபத்துள்ள செயலுக்காக அவரை வசைபாடி வருகின்றனர்.
இந்த வீடியோ எங்கு படமாக்கப்பட்டது , அந்த குழந்தைக்கு அவர்தானா தாய், இல்லை வேறு நபரின் குழந்தையா என்பது தெரியவில்லை.
இந்த வீடீயோவை பார்த்த பலரும் , கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், எங்கு எடுக்கப்பட்டது என்று கூறுங்கள் என்றும் அவர் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிந்தது.
ரீல்ஸ் மோகத்தின் மீதுள்ள ஆசையால், இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். இதுபோன்ற வீடியோ எடுப்பவர்களை உடனடியாக அரசு கண்டித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வுகளை அரசு மட்டுமல்ல சமூகத்தில் உள்ள அனைவரும் அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.