Watch Video | சாக்லேட் ப்ரவுனியும், பீடாவும்.. கலக்கும் வீடியோ.. பிரதமர் மோடி பிறந்த மாநிலத்தில் வைரலாகும் உணவு
குஜராத்தின் அகமாதபாத்தில் பானுடன் சாக்லேட் கலந்து தயாரிக்கப்படும் பிரத்யேக உணவு தயாரிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் தற்போது பொழுது போக்கிற்காக மட்டும் பயன்படுவதில்லை, வினோதமான உணவு செய்முறைகள் கற்றுத்தர சமூக ஊடகங்கள் ஒரு பிரபலமான இடமாக விளங்குகிறது. இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு அருமையான உணவு செய்யும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது, அதில் ஒரு சமையல்காரர் ஐஸ்கிரீம் மற்றும் பிரவுனியுடன் பானின் விசித்திரமான கலவையைத் தயாரிப்பதை பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர். இந்த வினோதமான உணவின் வீடியோ அகமதாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் அது ஆன்லைனில் பகிர பட்டதால், வீடியோ பெரும் புகழ் பெற்று, பலரால் ரசிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பார்ப்போர் அனைவரையும் அதிசயிக்க செய்துள்ளது.
Pan and Browny Combo. Only from Ahmedabad, Gujarat. 👍🏽👍🏽 pic.twitter.com/ggXwGURFS1
— raman (@Dhuandhaar) November 9, 2021
மைக்ரோ பிளாக்கிங் தளம் ஆன ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. ஒரு நபர் ஒரு வினோதமான பான் தயாரிப்பதைக் இந்த வீடியோவில் காண முடிகிறது. ஒரு சூடான தட்டில் வைக்கப்பட்டுள்ள சாக்லேட் பிரவுனியின் ஒரு துண்டைக் காண்பிக்கும் படியாக வீடியோ திறக்கிறது, அதன் மேல் அவர் சிறிது சாக்லேட் சாஸைத் தூவுகிறார். பின்னர் அவர் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம், மற்றொரு அடுக்கு சாக்லேட் சாஸ் மற்றும் இறுதியாக ஒரு பான் ட்விஸ்ட் ஆகியவற்றைச் சேர்க்கிறார். வீடியோவைப் பகிர்ந்த பயனர், "பான் மற்றும் பிரவுனி காம்போ. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து மட்டும் சிறப்பாக கிடைக்கிறது" என்று தலைப்பிட்டுள்ளார். இது ட்விட்டரில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, நெட்டிசன்களின் மூர்க்கத்தனமான எதிர்வினைகளுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. அசாதாரண பான் மற்றும் பிரவுனி டிஷ் குறித்து மக்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர், அதே நேரத்தில் பலர் சமையல்காரர் அத்தகைய உணவை தயாரிக்கும் முறையை குற்றம் சாட்டினார்.
இந்த வீடியோவைப் பார்த்து சிலர் பான் சாப்பிட மாட்டேன் என்று கூட கமென்டில் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் இதை சுவைக்க விரும்புவதாக கூறி உள்ளார். இந்த உணவை தயாரிப்பதற்கு பிரவுனி மற்றும் பான் இரண்டையும் பாழாக்கியதைக் கண்டு ஏராளமானோர் அதிருப்தியை தெரிவித்தனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர் தனது எதிர்வினையை வெளியிடுவதைத் தடுக்க முடியாமல் நெகட்டிவாக கமென்ட் செய்துள்ளார். இன்னும், இதில் மிகவும் கொடூரமான விஷயம் புதினா ஐஸ்கிரீம்தான். மற்றொரு பயனர், "இது மிகவும் கொடூரம்" என்று கமென்ட் செய்து இருந்தார். இன்னொரு நபர், "பாழாய்ப்போன நாக்கு தனிப்பட்ட சுவையை அனுபவிக்காமல், வயிறு போன்ற குப்பைத் தொட்டியாகிவிட்டது." என்று கூறி பலரின் எதிர்கருத்துக்களை பெற்றிருந்தார். மற்றொரு நபரின் கருத்து, "ஐ ஹேட் பான்" என்று எழுதியிருந்தார். "அசிங்கம்" என்று மற்றொரு பயனர் அதனை கண்டு எழுதி இருந்தார்.