மேலும் அறிய

இந்தியா உலகின் ஆன்மீகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்.! குடியரசுத் துணைத் தலைவர் அதிரடி பேச்சு.!

Vice President Jagdeep Dhankhar: இந்தியா உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்றும், தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் நடைபெற்ற 'இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தன்கர்,  "உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடையும் போது, பகைமைகள் கோட்பாடுகளாக மாறி வரும் நிலையில், பருவநிலை நெருக்கடி மேலோங்கி நிற்கும் போது, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடுகிறது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கைகளான இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் தழுவுவதில் விமோசனம் இருக்கலாம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரே அரசியலமைப்பின் கீழ் பல அதிகாரப்பூர்வ மொழிகள், பல மதங்கள் மற்றும் பல்வேறு இனங்களுடன் அதன் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. சமாதான சகவாழ்வு என்பது காலங்காலமாக நமது தத்துவத்தில் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, இறையாண்மை, நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களை விட பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சிந்தனையிலும் செயலிலும் எப்போதும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. பண்டிகைகள், உணவு வகைகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை இந்தியா வலிமையானதாக கருதுகிறது.

இந்தியா உலகின் ஆன்மீகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்.!  குடியரசுத் துணைத் தலைவர் அதிரடி பேச்சு.!

சுற்றுச்சூழலை வளர்க்கும் அதே வேளையில், உள்ளடக்கிய வளர்ச்சி, அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வு ஆகியவை இந்திய தத்துவத்தின் இதயமாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். காலங்காலமாக இந்தியாவின் முக்கிய மதிப்புகள் அதன் அடையாளத்தின் அடித்தளம் என்றும், இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள் மற்றும் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் கூறிய அவர், தற்போதைய காலங்களில் அவை பண்டைய ஞானம் மற்றும் நவீனத்தின் கலவையாகும்.

இந்தியாவை உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குறிப்பிட்ட தன்கர், இந்தியா தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வையும் தேடும் நாடு என்பதை சுட்டிக்காட்டினார். "சமீபத்தில், ஜி 20 தலைவராக, இந்தியா, அதன் முக்கிய மதிப்புகளால் தூண்டப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட உலகளாவிய முன்னேற்றத்திலிருந்து மனிதனை மையமாகக் கொண்ட உலகளாவிய முன்னேற்றத்திற்கு ஒரு மாற்றத்தை ஆதரித்தது, பிரிவினையைத் தாண்டி ஒற்றுமையை வலியுறுத்தியது. 

ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர ஜி20 உறுப்பினராக இணைத்தது, ஒரு மைல்கல் சாதனையாகும். ஜி20 தலைமையின் போது இந்தியா நடத்திய வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடுகள் சர்வதேச தெற்கு பிராந்தியத்தை சர்வதேச ரேடாரில் கொண்டு வந்தன. அமைதி காத்தல் மற்றும் பருவநிலை நடவடிக்கை முன்முயற்சிகள் மூலம் ஆக்கபூர்வமான உலகளாவிய சக்தியாக மாறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும்  குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget