மேலும் அறிய

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்தியதில் மோசமான இடத்தில் உத்தரப்பிரதேசம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்தியதில் மோசமான இடத்தில் உத்தரப்பிரதேசம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2024ம் ஆண்டிற்குள் குடிமக்கள் அனைவருக்கும் தூய்மையான குடி நீர் வழங்கும் நோகக்த்துடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், குடி நீருக்காக மக்கள்  அலையும் நிலையைப் போக்கி, ஒரு குடும்பத்திற்கு 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் 14% பேர் தான் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

இந்த ஆண்டு மே 5ம் தேதி நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்திலுள்ள 2.28 கோடி குடும்பத்தினர் குடிநீருக்காக மாற்றுவழியையே பயன்படுத்துகின்றனர் என்ற தகவலின் மூலம், ஜல் ஜீவன் திட்டம் இன்னும் அங்கு பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டம்  மோசமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது உத்தரப் பிரதேசம்.

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

ஜார்கண்ட் மாநிலத்தில் 20 சதவீதமும், சத்தீஸ்கரில் 22 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 23 சதவீதமும், ராஜஸ்தானில் 24 சதவீதமுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2,64,27,705 குடும்பங்கள் உள்ள நிலையில் 35,86,230 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது. அதே போல ஜார்கண்டில் 59, 23,320 குடும்பங்களில் 11,69,500 குடும்பங்களுக்கும், சத்தீஸ்கரில் 48,59,443 குடும்பங்களில் 10,82,180 குடும்பங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 1,77,22,587 குடும்பங்களில் 40,18,736 குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 1,05,68,805 குடும்பங்களில் 25,68,076 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது.

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் அறிக்கைப்படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் சுமார் 2.28 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என்றும், மேற்குவங்கத்தில் 1.37 கோடி குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 80 லட்சம் குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 1.26 கோடி குடும்பங்களில் 54.33 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. அதே போல, கர்நாடகாவில் 48.26 லட்சம் குடும்பங்களும், மத்திய பிரதேசத்தில் 49.29 லட்சம் குடும்பங்களும் பயனடைந்திருக்கின்றன. அதாவது, கர்நாடகா 49 சதவீதமும், தமிழ்நாடு 43 சதவீதமும், மத்திய பிரதேசம் 40 சதவீதமும் இத்திட்டத்தினை நிறைவேற்றியிருக்கின்றன.

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

பஞ்சாபில் 99 சதவீதமும், குஜராத்தில் 95 சதவீதமும், இமாச்சலப் பிரதேசத்தில் 94 சதவீதமும், பீகாரில் 93 சதவீதமும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தினை 100 சதவீதம் நிறைவேற்றிய மாநிலங்களும் இருக்கின்றன. கோவா, தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் 100% செயல்படுத்தி சாதனை படைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!
பெங்களூரு – மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது தொடங்கும்? 8 மணி நேரம் குறைய வாய்ப்பு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Embed widget