Watch Viral Video: ஹார்டுவேர் கடையில் திருட்டு.... கல்லா கட்டிய உடன் நடனமாடும் திருடன் - வைரல் வீடியோ !
திருட சென்ற இடத்தில் திருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சிசிடிவி கேமரா வந்த பிறகு பல்வேறு திருட்டு சம்பவங்களை காவல்துறையினர் வேகமாக கண்டறிந்து வருகின்றனர். அத்துடன் சிசிடிவி காட்சிகளின் மூலம் திருடர்கள் எப்படி திருடி சென்றனர் என்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு திருட்டு சம்பவத்தின் போது திருடன் ஒருவன் நடனமாடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் சந்தௌலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஹார்ட்வேர் கடையில் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்தக் கடையில் இருந்து சுமார் 6000 ரூபாய் பணம் மற்றும் நூற்றுக்கணக்கான ஹார்ட்வேர் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
यूपी में अब चोर चोरी के बाद जश्न मना रहा है चंदौली में @chandaulipolice आपकी कोई ज़िम्मेदारी है क्या ? @adgzonelucknow pic.twitter.com/RTnNJdScEa
— Manoj KAKA (@ManojSinghKAKA) April 18, 2022
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் திருடன் ஒருவன் கடைக்குள் நுழைந்து அனைத்து பொருட்களையும் எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன்பின்னர் அவர் திருட்டை முடித்துவிட்டு ஆனந்தமாக நடனமாடும் காட்சிகளும் இந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்தக் காட்சிகளை கொண்டு காவல்துறையினர் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் கடை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வீட்டிற்கு மிகவும் அருகே உள்ளது. ஆகவே இந்தத் திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்