Uttarakhand Helicopter Crash: ஹெலிகாப்டர் விபத்தில் 6 கேதார்நாத் யாத்ரீகர்கள் உயிரிழப்பு...அதிர்ச்சி தகவல்...
Uttarakhand Helicopter Crash: கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை செய்ய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
Uttarakhand Helicopter Crash: கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை செய்ய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே யாதிரைக்காக ஹெலிகாப்டர் ஒன்றில் 6 பேர் பயணம் செய்தனர். ஒரு விமானி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் கேதார்நாத் அருகே மலையில் மோதி ஹெலிகாப்டர் கிழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பின்பு அந்த இடம் புகையுடன் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அந்த இடத்தில் மீட்புப் பணி நடந்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் மழை பெய்து வருவதால், மீட்புப்பணி சிறிது நேரம் நடைபெறாமல் இருக்கிறது.
#UPDATE | Six people died in the helicopter crash in Phata, Uttarakhand: Abhinav Kumar, Special Principal Secretary to the Chief Minister pic.twitter.com/pgrasTAHTS
— ANI (@ANI) October 18, 2022
இந்த விபத்தானது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. ஜங்கிள் சட்டி அருகே ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அந்த ஹெலிகாப்டரில் பயணம் 6 பேர் பரிதாபமாக உயரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் சிறப்பு முதன்மைச் செயலாளர் அபினவ் குமார், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சில நேரத்தில் விபத்துக்குள்ளானது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
केदारनाथ में श्रद्धालुओं को ले जा रहे हेलिकॉप्टर के क्रैश की घटना बहुत दुःखद है। इस दुर्घटना में जान गवाने वाले सभी लोगों के परिजनों के प्रति संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें।
— Amit Shah (@AmitShah) October 18, 2022
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
केदारनाथ के समीप गरुड़ चट्टी में दुर्भाग्यपूर्ण हेलीकॉप्टर क्रैश में कुछ लोगों के हताहत होने का अत्यंत दु:खद समाचार प्राप्त हुआ है। राहत और बचाव कार्य हेतु SDRF और जिला प्रशासन की टीम घटनास्थल पर पहुंच चुकी है। इस दु:खद घटना के विस्तृत जांच के आदेश दे दिए गए है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 18, 2022