மேலும் அறிய

மதுபோதையில் வெறி பிடித்த ஆசிரியர்கள்.. துடிதுடித்த மாணவி.. Blackmail கொடூரம்!

நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மைனர் மாணவியை இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மைனர் மாணவியை ஆசிரியர்கள் இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து பிளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளனர்.

மாணவியை பிளாக்மெயில் செய்த ஆசிரியர்கள்:

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் கான்பூரில் நடந்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மைனர் மாணவியை இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, மாணவி ஒருவர், நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக கான்பூருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவரது உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திக் (32) தனது வீட்டில் நடந்த விருந்துக்கு அவரை அழைத்திருக்கிறார்.

உபியில் ஷாக் சம்பவம்:

விருந்தில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்வதாக கூறி இருக்கிறார். ஆசிரியரின் வீட்டுக்கு சென்றபோதுதான், தான் தனியாக வந்திருப்பது தெரிய வந்துள்ளது. தன்னை கட்டாயப்படுத்தி குடிக்கவைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, அந்தச் செயலை படம் பிடித்ததாக ஆசிரியர் சித்திக் மீது மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் அவரது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாகவும் கூறி மாணவியை ஆசிரியர் சித்திக் மிரட்டி இருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அந்த மாணவியை தனது வீட்டில் சிறிது நேரம் பிணைக் கைதியாகவும் வைத்திருந்தார். பின்னர், அங்கு விருந்துகளில் பங்கேற்கும்படி வற்புறுத்தினார். இது போன்ற ஒரு பார்ட்டியின் போதுதான், 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பாதிக்கப்பட்ட மாணவிக்கு புகார் அளிக்க தைரியத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து, இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget