நோ ஹெல்மெட்.. நோ பெட்ரோல்.. அரசு போட்ட அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?
Uttar Pradesh : உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் பங்க்குகளில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்கிற அறிவிப்பை அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு கொடுத்ததுள்ளது

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதிகளை மீறி வாகனங்களை இயக்குவது, தலை கவசம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற காரணிகளால் உயிரிழப்புகள் ஏற்ப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுக்கள் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் இரட்டை ஹெல்மெட்:
அந்த வகையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து மிக கடுமையாக்கப்பட்டது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், அதே போல இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஹெல்மெட் போடாமல் பைக்ல போனா...?; லைசென்ஸ் கேன்ஸல் - போலீஸ் அதிரடி
நோ ஹெல்மெட் நோ பெட்ரோல்:
தற்போது உத்தரபிரதேச மாநிலமும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதியை கடுமையாக்கி வருகிறது. அதன் ஒரு பாதியாக உத்தர பிரதேசத்தில் பெட்ரோல் பங்க்குகளில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்கிற அறிவிப்பை அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு கொடுத்தது.
இது போக்குவரத்து ஆணையர் பிரஜேஷ் நரேன் சிங் ஜனவரி 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை வெளியிட்டார், அதில் பெட்ரோல் நிலைய ஆபரேட்டர்கள்களிடம் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் விற்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Kumbh Mela 2025: மகா கும்பமேளா..! 4,000 ஹெக்டேர், 40 கோடி பக்தர்கள், 10,000 போலீசார், ரூ.2 லட்சம் கோடி - சுவாரஸ்ய தகவல்கள்
மேலும் மாநிலத்திலுள்ள 75 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் கோட்ட ஆணையர்களுக்குக் அனுப்பட்ட கடிதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான இரு சக்கர வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்பதைக் காட்டும் தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் ஆய்வுக்கு பிறகு:
இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வின் போது முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 25,000-26000 உயிர்கள் மாநிலத்தில் உயிரிழப்பதாக முதல்வர் குறிப்பிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

