மேலும் அறிய

Uttar pradesh: குறையாத முகப்பரு.. தள்ளிப்போன திருமணம்.. அதிர்ச்சி முடிவை எடுத்த இளம்பெண்!

பரு பிரச்சனையால் திருமணம் ஆகாத இளம்பெண் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

முகத்தில் இருந்த பரு பிரச்னையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

முகப்பரு பிரச்னை

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் அஜித் பாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முகப்பரு பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். இருப்பினும், அவருக்கு பரு பிரச்னை தீரவில்லை. இதன்காரணமாக அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் இளம்பெண் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

திருமணம் ஆகாததால் தற்கொலை

இந்த நிலையில், அந்தப் இளம்பெண் கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளம்பெண்ணின் தாயும் சகோதரியும் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது,  அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போட்டு கதறி அழுதுள்ளனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை சமாதப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, இந்த தற்கொலை தொடர்பாக பிசாண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினர் வருத்தம்

பல சிகிச்சைகள் செய்தும், பருக்கள் குணமாகாததால், இளம்பெண் மனமுடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். “எங்களுக்கு பல திருமண வரன்கள் வந்தன. ஆனால் பெண்ணின் பருக்கள் நிறைந்த முகத்தைப் பார்த்தபோது, பலர் அவரை நிராகரித்தனர்” என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிசாண்டா காவல்நிலையப் பொறுப்பாளர் கே.கே.பாண்டே தெரிவித்தார்.

முகத்தில் ஏற்பட்ட பருவால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget