Watch Video: 98 வயதில் விடுதலையான குற்றவாளி... வாசல் வரை வந்து வழியனுப்பிய காவல்துறை..! வைரலாகும் வீடியோ..!
உத்தரபிரதேசத்தில் சிறையில் இருந்து விடுதலையான 98 வயது குற்றவாளியை சிறைக்காவல் அதிகாரிகளே வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது அயோத்தியா. இங்குள்ள சிறையில் இருந்து விடுதலையான கைதிக்கு சிறைத்துறை காவல் அதிகாரிகள் பிரியாவிடை அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
98 வயது குற்றவாளி:
அயோத்தியாவில் உள்ள சிறையில் ராம் சூரத் என்ற குற்றவாளி சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். அவருக்கு வயது 98 ஆகும். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார். ஐ.பி.சி. 452, 323 மற்றும் 352 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை உத்தரபிரதேச காவல்துறையினர் 93 வயதில் கைது செய்தனர். அதற்காக அவர் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தார். ராம்சூரத் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதியே சிறையில் இருந்து விடுதலையாக வேண்டியது.
परहित सरिस धर्म नहीं भाई . 98 वर्षीय श्री रामसूरत जी की रिहाई पर लेने कोई नहीं आया . अधीक्षक जिला जेल अयोध्या श्री शशिकांत मिश्र पुत्रवत अपनी गाड़ी से घर भेजते हुए . @rashtrapatibhvn @narendramodi @myogiadityanath @dharmindia51 pic.twitter.com/qesldPhwBB
— DG PRISONS U.P (@DgPrisons) January 8, 2023
ஆனால், நீரிழிவு நோயாளியான அவர் சிகிச்சைக்காக கடந்தாண்டு மே மாதம் 90 நாட்கள் பரோலில் சென்றிருந்தார். இந்த நிலையில், அவுர் தற்போது விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து விடுதலையாகிய ராம்சூரத்தை அதிகாரிகள் சிறையில் அவர் செய்த வேலைக்கான சம்பளப் பணத்தை வழங்கியதுடன், அவருக்கு போர்வைகள் மற்றும் சில பொருட்களை வழங்கி வழியனுப்பினர்.
விடுதலை:
வயது முதிர்வு காரணமாக மிகவும் தள்ளாடியபடி இருந்த ராம்சூரத்தை அதிகாரிகள் இருவர் கைத்தாங்கலாக வெளியே கொண்டு வந்துவிட்டு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை உத்தரபிரதேச சிறைத்துறை டி.ஜி.பி. மிஸ்ரா புட்ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 899 பேர் லைக் செய்துள்ளனர். சிறையில் இருந்து விடுதலையான ராம்சூரத்தை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Governor powers: உச்சகட்ட அதிகார போட்டி... ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள்தான் என்னென்ன?
மேலும் படிக்க: ஜனநாயகத்தில் ஒரு நபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.. பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கார்கே..