மேலும் அறிய

UPSC 2021 Topper: “யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம்; எதிர்பார்க்கவே இல்லை...”- யார் இந்த ஸ்ருதி சர்மா? 

தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். இதில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

தேர்வு முறை எப்படி?

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 

தேர்வு நடைபெற்றது எப்போது?

முன்னதாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி யூபிஎஸ்சி சிஎஸ்இ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் சில தினங்களிலேயே அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது. தேர்ச்சி பெற்றோருக்கான முதன்மைத் தேர்வு, 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியாகின. 

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு மே 26 வரை நடைபெற்றது. இந்நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று (மே 30ஆம் தேதி) வெளியாகி உள்ளன. 
 
இதில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்த மாணவி ஸ்ருதி சர்மா. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார். 

முதலிடம் பெற்றது குறித்து ஸ்ருதி சர்மா கூறும்போது, ''தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்ற பெண் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4ஆவது இடத்தை, ஐஸ்வர்யா வர்மா என்ற தேர்வரும் பெற்றுள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget