மேலும் அறிய

UP MARRIAGE: உத்தரபிரதேசத்தில் முத்தம் கொடுத்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன் தனக்கு முத்தமிட்டதால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த சம்பவங்களை செய்வது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. வீட்டை கட்டும்போது எப்படி ஒவ்வொரு செங்கல்லை அடுக்குவதும் முக்கியத்துவம் பெறுகிறதோ, அதுபோன்று தான் திருமணத்திற்கான ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பணிகளில் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்தாலும், நொடி நேரத்தில் நிகழும் சிறு தவறுகளும் மொத்த உழைப்பையும் வீணாக்கி விடும். அப்படி ஒரு சம்பவம் தான், உத்தரபிரதேசத்தில் நடைபெற இருந்த திருமணத்தில் நிகழ்ந்துள்ளது.

மணமகளை முத்தமிட்ட மணமகன்:

உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் விவேக் என்ற இளைஞருக்கும்,  பட்டதாரி இளம்பெண்ணுக்குமான திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திருமண நாளன்று இருவரும் மலர் மாலைகளை மாற்றிக்கொண்டதை தொடர்ந்து, மணமகன்   மேடையிலேயே திடீரென மணமகளுக்கு முத்தம் அளித்துள்ளார். இதனால் கோபமான மணப்பெண், திருமண மண்டபத்தில் திரண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில், தன்னை மணமகன் முத்தமிட்டது அவமானமாக இருப்பதாகக் கூறி, இந்த திருமணமே தனக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சமாதான முயற்சிகளும், தோல்வியும்:

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் விவேக், தனது நண்பகளுடன் ஏற்பட்ட பந்தயம் காரணமாகவே, மணமேடையிலேயே மணமகளுக்கு முத்தமிட்டதாக விளக்கமளித்துள்ளார். ஆனால், பந்தயத்திற்காக தனக்கு முத்தம் அளித்த மணமகனின் நடத்தையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக மணமகள் குற்றம்சாட்டியுள்ளார். மணமகளின் குடும்பத்தினர் அவரை  சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மணமகள் கடைசிவரை சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்ய முடியாது என திருமணத்தை நிறுத்தி விட்டார். மணப்பெண்ணின் இந்த முடிவால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை பேச்சுவார்த்தை:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு நடந்த விசாரணையின் போது, மணமகன் என்னை முத்தமிட்டபோது, ​​நான் அவமானப்பட்டதாக உணர்ந்தேன். எனது சுயமரியாதையைப் பற்றி கவலைப்படாமல், பல விருந்தினர்கள் முன்னிலையில் அவர் தவறாக நடந்து கொண்டார். மணமகன் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மணமகனோ தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமக மறுத்துள்ளார். 

கைவிடப்பட்ட திருமணம்:

காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றும் மணமகள் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மணமகளின் தாயார்,  நண்பர்களின் தூண்டுதலின் பேரிலேயே மணமகன் அவ்வாறு நடந்துகொண்டார். என் மகளை சமாதானப்படுத்த முயற்சித்தோம், ஆனால் அவர்  திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். நாங்கள் சில நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார். சம்பவம் நடந்த நேரத்தில் சடங்குகள் செய்யப்பட்டதால், அவர்கள்  தம்பதியினராகவே கருதப்படுகின்றனர். இரண்டு நாட்கள் காத்திருந்து மணமகளின் இறுதி முடிவை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியை சேர்ந்த மணப்பெண் ஒருவர்,  விலை உயர்ந்த லெஹங்கா கிடைக்காததால் தனது நிச்சயம் ஆன நபரை திருமணம் செய்ய மறுத்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
Embed widget