Morning Headlines: கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. முக்கியச் செய்திகள்!
Morning Headlines February 3: இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
-
ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது. மேலும் படிக்க..
-
தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!
கடந்தாண்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. மேலும் படிக்க..
-
6 ஆண்டுகளில் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மரணம்! முதலிடத்தில் கனடா - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மேற்படிப்பை படித்து வருகின்றனர். இதனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பலரும் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க..
-
மகாராஷ்டிராவில் பரபரப்பு! சிவசேனா முன்னாள் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ..!
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஹிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியாக பாஜக எம்.எல்.ஏ சுட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சுவார்த்தையின்போதே பாஜக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க..
-
”காங்கிரசுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது”! I.N.D.I.A. கூட்டணியை நொறுக்கும் மம்தா பானர்ஜி!
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சுமூகமான முடிவு எட்டப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கக் கோரி கொல்கத்தாவில் நடைபெற்ற தர்ணாவில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது, “ இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோத வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அதோடு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் குறைந்தது 40 தொகுதிகளையாவது வெல்லுமா? என்பதே சந்தேகம்" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..