'ஆத்தாடி இவ்ளோ விலையா'- டாப் 11 ஆடம்பர இந்திய பங்களாக்கள் ! ஓனர் யார் சார்?
இந்தியாவில் உள்ள அதிக விலை மதிப்பை கொண்ட வீடுகள் என்னென்ன? அவற்றின் உரிமையாளர்கள் யார் யார்?
உலக பில்லினியர்கள் பட்டியலில் 3-இல் ஒரு பங்கு பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களின் பணத்தின் ஆடம்பரம் அவர்களின் வீடுகளில் தெரியும் வகையில் இருக்கும். ஏனென்றால் பொதுவாக பணக்காரர்கள் ஆடம்பர வீடுகளில் அனைத்து வித சொகுசு வசதிகளுடன் கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஆடம்பர பங்களாக்கள் என்னென்ன? அவற்றின் உரிமையாளர்கள் யார் யார்?
1. அண்டிலா(1200 கோடி ரூபாய்):
மும்பையில் அமைந்துள்ள அண்டிலா என்ற ஆடம்பர வீடு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா. 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் 27 தளங்களை இந்த வீடு கொண்டுள்ளது. 3 ஹெலிபேட் வசதி, பார்டி இடம் உள்ளிட்ட அனைத்தும் இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 1200 கோடி ரூபாய்.
2. அபோட்(5000 கோடி ரூபாய்):
அம்பானி சகோதரர்களில் இளைய சகோதரரான அனில் அம்பானியின் வீடு தான் இந்த அபோட். இந்த வீடு 16,000 சதுர அடி பரப்பளவில் 66 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் மொத்த மதிப்பு 5000 கோடி ரூபாய்.
3. ஜே.கே ஹவுஸ் (6000 கோடி ரூபாய்):
பிரபல ரேமெண்ட் குழுமத்தின் தலைவர் கவுதம் விஜய்பட் சிங்கானியா. இவருடைய வீடு தான் இந்த ஜே.கே.ஹவுஸ். இந்த வீடு 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 468 அடி உயரத்தில் 36 தளத்துடன் மும்பையில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு 6000 கோடி ரூபாய்.
4. ஜட்டியா ஹவுஸ்(425 கோடி ரூபாய்):
மும்பையின் டோனி மலபார் ஹில் பகுதியில் கடல் பார்வையில் அமைந்துள்ளது இந்த ஜட்டியா ஹவுஸ். இதன் உரிமையாளர் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்களம் பிர்லா ஆவார். இந்த வீடு 30ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
5. ஜின்டால் ஹவுஸ்(400 கோடி ரூபாய்):
ஜெஸ்டபிள்யூ குழுமத்தின் சஜன் ஜின்டாலின் வீடு இது. இந்த வீட்டை 400 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஜிண்டால் ஏலத்தில் எடுத்தார். இது ஒரு இரண்டு மாடி தளம் கொண்ட வீடு.
6. மன்னட் ஹவுஸ்(200 கோடி ரூபாய்):
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் 2001ஆம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். 2005ஆம் ஆண்டு இதை மன்னட் ஹவுஸ் என்று மாற்றியுள்ளார். இந்த வீட்டின் மொத்த மதிப்பு 200 கோடி ரூபாய்.
7. டாடாவின் வீடு(150 கோடி ரூபாய்):
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வீடு மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடு 13,350 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாய்.
8. ஜல்சா ஹவுஸ்(120 கோடி ரூபாய்):
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மும்பை வீடு இதுவாகும். இந்த வீட்டில் பல ஆடம்பர பொருட்கள் இடம்பெற்று உள்ளன. இந்த வீட்டின் மொத்த மதிப்பு 120 கோடி ரூபாய்.
9. ரூயா ஹவுஸ்(120 கோடி ரூபாய்):
எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் ஷாஷி ரவியின் வீடு இதுவாகும். இந்த வீடு 2.24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 120 கோடி ரூபாய்.
11. ஸ்கை ஹவுஸ்(100 கோடி ரூபாய்):
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பெங்களூர் வீடு இதுதான். இந்த வீட்டில் 34 தளங்கள் அமைந்துள்ளன. 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 100 கோடி ரூபாய்.
இவ்வாறு இந்தியாவில் அமைந்துள்ள மிகவும் விலை உயர்வான ஆடம்பர பங்களாக்களில் டாப் 11 பங்களாக்கள் இவையாகும்.
மேலும் படிக்க: ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன் : ஜெயின் ரிப்போர்ட் சொல்வது என்ன?