Top 10 News Headlines: ”சட்டக்கல்லூரிகள் நிறுத்தி வைப்பு” மனைவி தொல்லை - நீதிமன்றம் அதிரடி - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 28: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
“இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிதது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 12.11% தமிழ்நாட்டின் பங்கு உள்ளது! தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்" - CII தென் இந்திய ஆண்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவையில் அமளி - அதிமுக வெளியேற்றம்
முன்னறிவிப்பு இல்லாமல் பேச அனுமதி கோரிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி . மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் பதில். பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
”சட்டக்கல்லூரிகள் நிறுத்தி வைப்பு”
"தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 48,550 மாணவர்கள் சட்டம் படித்து வருகின்றனர். தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" - அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்
தவெக பொதுக்குழு
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்மாக் ஊழல், இருமொழிக்கொள்கை மற்றும் சட்ட-ஒழுங்கு தொடர்பான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் தவெக பூத் கமிட்டி மாநாடு மற்றும் விஜயின் மாநிலம் முழுவதற்குமான சுற்றுப்பயணம் குறித்து அறிவிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.66,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 8 ஆயிரத்து 340 ரூபாயை தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து 114 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
”மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது”
“ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்த சட்டப்பூர்வமான உரிமையை மாநில அரசுகளுக்கு அரசியல்சாசனம் வழங்கியுள்ளது!” -நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில், நாடு முழுமைக்கும் தடை விதிக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்க பதில்
”சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது”
”துன்பம், வேதனை மிகுந்த திருமண வாழ்க்கையை சகித்துக் கொள்ளும்படி சட்டத்தால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது” -ஒடிசா உயர்நீதிமன்றம். விவாகரத்துக்கு பின்பும் கணவருக்கு எதிராக 45 வழக்குகள் பதிவு செய்த மனைவி. இது மனரீதியாக கொடுமைப்படுத்துவது என நீதிமன்றம் கருத்து. பராமரிப்புக்காக கணவர் கொடுத்த ரூ. 63 லட்சம் போதாது என வாதாடிய மனைவியை கண்டித்து, விவாகரத்து செல்லும் என நீதிமன்றம் உத்தரவு
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்துக்கு இந்தியாவில் தடை!
பிரிட்டிஷ் - இந்திய இயக்குநர் சந்தியா சூரி இயக்கி, இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்ட ‘சந்தோஷ்' படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதிப்பு. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை இப்படம் பேசுகிறது. படத்தில் உள்ள கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல காட்சிகளை வெட்ட தணிக்கை வாரியம் வலியுறுத்திய நிலையில், படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, அவர்களுக்கு தான் தீங்கு விளைவிக்கும் என ஸ்பெயின் எச்சரித்துள்ளது. தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
சென்னை - பெங்களூரு மோதல்
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போட்டி முடிந்த பிறகு ரசிகர்களின் பயணத்திற்காக, நள்ளிரவு வரை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.





















