Top 10 News: மதுரை விமான நிலையம் போராட்டம் வாபஸ்; 3 மாவட்டங்களில் மழை இருக்கு.! டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
மதுரை விமான நிலையம் போராட்டம்:
சர்வதேச விமான நிலையமாக செயல்படும் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருந்த நிலையில், மாற்று இடம் இதுவரை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாற்று இடம் தராமலே அப்பகுதி மக்களை காலி செய்ய காவல்துறையினரும், அதிகாரிகளும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. காலைமுதல் போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு வருகைதரும் நிதிக்குழு:
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், நிதிக்குழுவின் பரிந்துரைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்நிலையில், அடுத்து 5 ஆண்டு திட்டம் எப்படி இருக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் தரவுகளை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று நிதிக்குழு சேகரித்து வருகிறது. அதில் மாநிலங்களின் பொருளாதார நிலைமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் 16-வது நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு, 4 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளனது.
தமிழ்நாடு- வானிலை:
17-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால். பகுதிளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜார்ஜியா தேர்தல் தலைவர் மீது தாக்குதல்
Georgia Election Commission chairman: ஜார்ஜியாவில் தேர்தல் முடிவை அறிவிக்க தயாராக இருந்த தேர்தல் தலைவர் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர் கருப்பு ஊற்றிய நிகழ்வானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக,ஜார்ஜியாவின் எதிர்க்கட்சியினரும் அமெரிக்காவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.
சுப்மன் கில் விலகல்:
Shubman Gill: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய வீரர் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வெடித்த கலவரம்:
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு சனிக்கிழமை மாலை 5:15 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஏழு மாவட்டங்களில் இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த வாரம் ஜிரிபாமில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டது, மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, சனிக்கிழமையன்று பாஜகவை சேர்ந்த மூன்று மணிப்பூர் அமைச்சர்கள் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை எதிர்ப்பாளர்கள் தாக்கியதால் மீண்டும் கலவரம் வெடித்தது.
இணையதளம் முடக்கம்:
Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தால் 7 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனிடயே, மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மணிப்பூர் மாநிலம் மத்திய அரசால் மறக்கப்பட்டுள்ளதாகவும், அமைதிக்கான அந்த மாநில மக்களின் கோரிக்கை செவித்திறன் இல்லாதவர்களின் காதுகளில் ஒலிக்கட்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் வெளிநாடுகள் பயணம்:
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.நேற்று சென்ற அவர், நவம்பர் 21 ஆம் தேதிவரை வெளிநாடுகளில் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுருளி அருவியில் புனித நீராடி குருசாமி கைகளால் மாலை அணிந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தங்களின் விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
கங்குவா முதல் அரைமணிநேரம் சுமார்தான்- நடிகை ஜோதிகா
கங்குவா முதல் அரைமணி நேரம் சுமார்தான் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். மேலும், கங்குவா திரைப்படத்திற்கு , எதிர்மறை விமர்சனமானது திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.