மேலும் அறிய
Advertisement
Today's News Headlines: ஆஸ்கரில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு தடை.. தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு.. இன்னும் பல முக்கியச் செய்திகள்
Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கிய செய்திகளை காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை மேயர் ப்ரியா இன்று தாக்கல் செய்கிறார்
- கரூரில் உள்ள தனியா நிறுவன பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளனமான பொருட்கள் நாசமடைந்துள்ளது
- தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவில் தமிழகம், கேரளாவில் இருந்து தலா ஒரு நிபுணரை கூடுதலாக சேர்க்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்தியா:
- ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது
- ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் அதிக நேர மின்வெட்டு ஏற்பட்டிருப்பதால் மக்கள் அவதி, மருத்துவமனைகளில் தவிப்பு
- 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு
உலகம்:
- இலங்கை அதிபர் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முயற்சி
- உக்ரைன் ரணஸ்டாக் இரயில் நிலையில் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று எடுக்கபப்ட உள்ளது
- ஆஸ்கரில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தடை
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராகுல் திவாட்டியா கடைசி 2 பந்தில் அடித்த கடைசி 2 சிக்ஸரால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும், இரண்டாம் போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோத உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion