மேலும் அறிய
Headlines Today : அமைச்சரின் சகோதரர் தற்கொலை.. மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற செங்கல்பட்டு பெண்.. தீபக் ஹூடா விலகல்... இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் : ஆளுநரின் அனுமதிக்கு பிறகு விரைவில் சட்டம் அமல்
- சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனை
- மக்களை பாதுகாப்பதே நமது இலக்கு, வெள்ள தடுப்பு பணிகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்- முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுரை
- அமைச்சர் சேகர் பாபுவின் மூத்த சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த திட்டம் : அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றார்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு
- அமைச்சர் எ.வ.வேலுவுடன் கொரியாவின் சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை குழுவினர் சந்திப்பு
- தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் நேற்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பெண் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
இந்தியா:
- திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம் ; 3 அடுக்கு சோதனைக்கு பின் அனுமதி
- பாகிஸ்தானுக்கு எம் - 16 போர் விமானம்; தீவிரவாதத்தை ஒடுக்க என சொல்லி முட்டாளாக்காதீங்க - அமெரிக்காவை சாடிய ஜெய்சங்கர்
- மத உரிமைகள் சார்ந்து தவறான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டி தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை மத்திய தகவல் மற்றும் தொடர்பியல் அமைச்சகம் நீக்கியுள்ளது.
- ஐபோன்-14 மாடலை உற்பத்தி செய்யும் பணியை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகம்:
- நேபாளத்தில் மனாஸ்லு என்ற மலைப்பகுதியின் IV முகாமுக்கு சற்று கீழே பனிச்சரிவு ஏற்பட்டதில் மலை ஏறுபவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர்.
- கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியலில் கத்தார் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்தது.
- ஈரான் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த நபரின் இறுதி சடங்கில் அவரது சகோதரி அரசுக்கு எதிராக தலைமுடி வெட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்க டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஐசிசியின் டி20 தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
- ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தட்டிப்பறித்தது.
- விராட் கோலி சர்வதேச அளவில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion