மேலும் அறிய
Advertisement
Today Headlines : கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு பதற்றம்.. மியான்மர் இந்தியர்களை மீட்கும் முயற்சி..இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
- துறைமுகங்கள் வரைவு மசோதாவில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை நீக்கவும் கோரிக்கை.
- அதிமுகவை பிளவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
- அரசியல் பார்க்காமல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
- சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
- உயர் நீதிமன்ற தலமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் டி.ராஜா பொறுப்பேற்றார்.
- மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- திமுகவால் தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம்.
- பாப்புலர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- கோவை மாநகர பாஜக உள்ளிட்ட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், குற்றத்தில் ஈடுபட்டோரைக் கள்டுபிடிக்க ஐந்து தனிப்பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- விழுப்புரம், அருகே குடல்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
- திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் வடிவேலு அரசியல் தேவையில்லை, சினிமாவில் இருந்து கொண்டே நன்மை செய்யலாம் எனப் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா
- தாய்லாந்தில் ஐடி வேலை வாய்ப்புகளைப் பெறும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- கர்நாடகாவில் யானைகள் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 125 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னதாக அறிவித்தார்.
- மறைந்த ஜப்பான பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி ஜப்பான் செல்கிறார்.
- அப்போது தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும் சந்திக்கிறார்.
- 1700 கோடி ரூபாய் மதிப்பில் பிரமோஸ் ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய் ஒப்பந்தம். பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்.
உலகம்
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
- ரஷ்யாவில் உக்ரைன் போருக்காக 3 லட்சம் பேரைத் திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டதற்கு எதிராக, அந்நாட்டின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மொத்தம் 30 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். - உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பேர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
- சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி இருவரும் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion