மேலும் அறிய
Advertisement
Today Headlines: வெளியேறிய ஓ.பி.எஸ்! அதிகரிக்கும் கொரோனா! திரௌபதி முர்மு இன்று வேட்பு மனுத்தாக்கல்! இன்னும் பல
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிறைவு பெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு
- அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு – பொதுக்குழுவில் முடிவு
- அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம்
- ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந் தேதி கூடும் – அவைத்தலைவர் தமிழ்மகன்
- அ.தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்
- பொதுக்குழுவின் பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம்
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு
- தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா தனியார் பேருந்து உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த புகாரில் கைது
- தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்தது – மீண்டும் வலுக்கும் கட்டுப்பாடுகள்
- தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்
- சென்னையில் ரூபாய் 2 கோடி ஹவாலா பணம் சிக்கியது – போதைப்பொருள் சோதனையில் சிக்கியது
இந்தியா :
- பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல்
- பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு
- மகாராஷ்ட்ராவில் சிவசேனா அணிக்கு அதிகரிக்கும் அதிருப்தி – ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவும் எம்.எல்.ஏ.க்கள்
- பிரிக்ஸ் நாடுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி
- அசாம் கனமழையின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு
- என்.ஐ.ஏ.வின் புதிய தலைவராக தினகர்குப்தா நியமனம்
உலகம் :
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய உதவிப்பொருட்கள் ஆப்கன் சென்றது
- பெல்ஜியத்தில் விமான நிலைய பணியாளர்கள் வேலைநிறுத்தம் – 300க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிப்பு
விளையாட்டு :
- மகளிர் உலககோப்பை வில்வித்தை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
- மகளிர் உலகோப்பை வில்வித்தை அரையிறுதியில் துருக்கியை வீழ்த்தி அபாரம்
- இங்கிலாந்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இளம்வீரர் ஸ்ரீகர் பரத் அபாரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion