மேலும் அறிய
Advertisement
Headlines Today : சென்னையில் விடிய விடிய கனமழை, பாஜகவின் வேட்பாளரான திரெளபதி முர்மு.. இன்னும் பல முக்கிய செய்திகள்!
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை
சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி இன்று காலை 8 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி செல்லும் ஆளுநர் நாளை மீண்டும் சென்னை திரும்புகிறார்.
- அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யக்கோரிய கூடுதல் மனுக்களை நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
- அதிமுக பொதுக்குழுவின் பாதுகாப்புக்கோரி தொடரப்பட்ட காவல் துறையின் 26 கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையகரத்தில் ஓபிஎஸ் மனு. - இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கோரி மனு.
- ஒருங்கிணைப்பாளரின் அனுமதி இன்றி பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு
- வரும் 26ஆம் தேதி நடைபெறவிருந்த காவிரி மேலாண்மைக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஜூலை 6 ஒத்திவைப்பதாக அறிவிப்பு
இந்தியா:
- பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரக திரௌபதி முர்மு தேர்வு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
- எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு.
- டெல்லியில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முகாம்.
- மேகத்தாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.
- மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு சிக்கல்.
- அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனாவின் 20க்கும் மேற்பட்ட எம் எல் ஏக்கள் ஆட்சிக்கு எதிராகத் திரும்பினர்.
- நேஷனர் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் 5ஆவது நாளாக ராகுல் காந்தி விசாரணை.
- சோனியா காந்தி நாலை ஆஜராக ஏற்கெனவே சம்மன்.
- பொருளாதார நெருக்கடியின் நடுவிலும் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தமிழ் தேசிய கூட்டணி அமைப்பின் எம்பி ஸ்ரீதரன் வேதனை.
உலகம்:
- உலக அளவில் 54.56 கோடி பேருக்கு கொரோனா.
- பிரான்சில் அதிகபட்சமாக ஒரே நாளில் 95217 பேருக்கு கொரோனா.
- நியூயார்க்கில் சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டௌசர் மூலம் அழிக்கப்பட்டன.
- பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு கைத்தடிகள் உதவி இல்லாமல் தோளில் மாட்டிச் செல்வது போன்ற உதவி சாதனம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கண்டுபிடிப்பு
கிரிக்கெட்:
- 4ஆவது ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இலங்கை.
- 5 போட்டிகள் கொண்ட தொடரையும் இலங்கை கைப்பற்றியது.
- ஓராண்டுக்குப் பிறகு டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற செரினா வில்லியம்ஸ்.
- இரட்டையர் பிரிவில் வெற்றியுடன் தொடங்கினார் செரினா வில்லியம்ஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion