மேலும் அறிய
Advertisement
Today Headlines : தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்...ஸ்ரீநகரில் நிலஅதிர்வு... பும்ரா முன்னேற்றம்.. இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- 2022 - 2023 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் : புதிய அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டம்
- சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு : உச்சநீதிமன்றம் அனுமதி
- பொதுமக்களின் புகாரை விசாரித்து குறைகளை களைய வேண்டும் : காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
- தமிழ்நாட்டில் உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் போட்டி : முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 17 முதல் காலை 5 மணி இரவு 11 மணி வரை இயங்கும் - மெட்ரோ நிர்வாகம்
- வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மார்ச் 19 அன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை மையம்
- நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் என்கவுட்டர் செய்தனர்.
- நீட் விலக்கு மசோதா தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கிறது - முதலமைச்சர் முக ஸ்டாலின்
இந்தியா :
- ஜம்மு - காஷ்மீர் : ஸ்ரீநகரின் வடக்கு பகுதியில் நிலஅதிர்வு - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
- லடாக் எல்லை பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,876 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
- இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் மின்சார டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் பதவியேற்றார்.
உலகம் :
- உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
- ஜப்பானில் புகுஷிமா பகுதியில் 7. 3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பற்றி விவாதிக்க அடுத்த வாரம் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
விளையாட்டு :
- ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டாப்-5 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- மகளிர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனைப்படைத்திருக்கிறார் ஜூலான் கோஸ்வாமி
- இந்திய மகளிர் கால்பந்து அணியின் பயிற்சி முகாமிற்கு 6 தமிழ்நாடு வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தஞ்சாவூர்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion