மேலும் அறிய
Advertisement
Today Headlines 8 June 2023: உலக செய்திகள் அனைத்தும் உங்களை சுற்றி.. நிமிடத்தில் அறிய வேண்டுமா..? காலை தலைப்பு செய்திகள் இதோ!
Headlines News: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- பாஜகவை வீழ்த்த முரண்பாடுகளை களைந்து ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் - கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை
- சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
- திமுக அரசு கடந்த 9 மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய பின்பு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசின் 33 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்குப் பின்பு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணி அமர்த்தப்படவில்லை - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை 20 ஆயிரமாக உயர்த்தி நிரப்புக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- வருகின்ற 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மாணவ மாணவிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்
- குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க. வலியுறுத்தல்
இந்தியா:
- கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட 35க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி
- ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து: நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஏறியதில் 4 பேர் உயிரிழப்பு
- நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு - மத்திய அமைச்சரவையில் முடிவு
- பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் வரும் 23ம் தேதி எதிர்க்கட்சி கூட்டம்- ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிப்பு
- மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன் பேச்சுவார்த்தை : 15ம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு - மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு
- தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலில் வயநாடு தொகுதியில் விரைவி இடைத்தேர்தலா..? மாதிரி வாக்குப்பதிவு நடந்தது
- மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரிப்பு: தொடரும் வன்முறையால் பதற்றம்
- தொலைதொடர்பு துறையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு, 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளை ஒதுக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம்:
- ரோமில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்ஸிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சோமாலியா: பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலால் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
- செர்பியா மக்கள் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை கொண்டுள்ளனர் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
- 'உக்ரைனின் முக்கிய அணையில் உடைப்பு ஏற்பட்டது மிக கொடூரமானது' - ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்
விளையாட்டு:
- உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவிப்பு
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை எடுக்காதது ஏன்? என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
- உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசி டிராவிஸ் ஹெட் மிரட்டல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion