Evening Headlines June 15: குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000.. இந்தியில் சூர்யா.. இன்றைய தலைப்புச் செய்திகள்!
Evening Headlines Today June 15: இன்றைய தினத்தில் நடந்த முக்கியச் செய்திகள் சில..

தமிழ்நாடு:
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கொண்டு வருவது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை
சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடர்பான போஸ்டர்கள் கிழிப்பு -நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதரவாளர்கள் போராட்டம்
சென்னை, கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில்,உடலில் இருந்த காயங்களால் இறக்கவில்லை என உடற்கூராய்வு தெரிவிப்பதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி
குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் கந்துவட்டி நடவடிக்கையில் சிக்கிய 32 பேர் கைது
முகக்கவசம் அணியவோ, தனி மனித இடைவெளி கடைபிடிக்கவோ எந்த விலக்கும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இந்தியா:
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத்பவாரை அணுகிய நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்
5ஜி அலைக்கற்றை ஏலத்தை பிரதமர் தலைமையில் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை 3 வது நாளாக விசாரணை - எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள் கைது
டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு

உலகம்:
சமீபத்தில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் க்ரெம்லினில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் புடின் கலந்துகொண்ட போது, அவர் நிற்பதற்கு சிரமப்படும் வீடியோ வைரல்
சீனாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியில் வேற்று கிரகவாசிகள் குறித்து கண்டறிந்துள்ளதாக சீன அரசின் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி இதழில் தகவல்
`I2U2' என்று அழைக்கப்படும் குழு உருவாக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. இதில் I என்பது இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளையும், U என்பது அமெரிக்கா, அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளையும் குறிக்கும்.
சினிமா:
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சங்கர். அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ரஜினியை சந்தித்தது எனர்ஜியாகவும், பாசிட்டிவ்வாகவும், அன்பானதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததை அடுத்து நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாய்ஸ் நோட் வெளியிட்டுள்ளார்
சூரரைப் போற்று'இந்தி ரீமேக்கில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகர் சூர்யா





















