Breaking LIVE: தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்திய தலைமை பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளார். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் இரு சமூகத்தினரும் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடைவர்கள் ஆவர். இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..!
தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை - 118
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை -670
உயிரிழப்பு ஏதும் இல்லை
ஜாலியோ ஓ ஜிம்கானா பாடலை 3 மில்லியனை நெருங்கியது..!
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் 2 சிங்கிள் பாடலான ‘ஜாலியோ ஓ ஜிம்கானா’ பாடலை 3 மில்லியனை நெருங்கியது..!





















