மேலும் அறிய
7 AM Headlines: பட்டென உலகம் முதல் உள்ளூர் செய்திகள் அறிய வேண்டுமா? இதோ காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தங்கம் விலையில் அதிரடி சரிவு; தங்கம் 2 நாளில் ரூ.1360 குறைந்தது
- சிறப்பான முறையில் கடமையாற்றி புதிய கலெக்டர்கள் அரசுக்கு நற்பெயரை தேடித்தர வேண்டும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுரை
- காவல்துறையில் புதிதாக டிரோன் காவல் நிலையம் - கட்டிப்பாட்டு அறையுடன் விரைவில் அமைப்பு
- காயம் ஏற்படும் என்ற காரணத்திற்காக கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
- பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் - சந்தேக மரணம் என வழக்குப்பதிவு
- வாணியம்பாடியில் இலவச புடவை டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
- டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் தென்னரசு என்பதை தேர்தல் ஆணையத்துக் தெரிவிக்க தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரமளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் இலக்கு வைத்து பணிகளை முடிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, பொதுக்குழுவில் பெரும்பான்மை கிடைக்காது என்பதால் ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா:
- உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
- கொலீஜியம் பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
- சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகான் தெரிவித்துள்ளார்.
- கர்நாடக தேர்தலை முன்னிட்டு கர்நாடக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரயில்வே திட்டங்களுக்காக கர்நாடகத்திற்கு ரூ.7,561 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் பியூஸ்கோயல்
உலகம்:
- தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி.
- அமெரிக்காவின் வான் பரப்பில் சுற்றி திரியும் சந்தேகத்திற்கிடமான சீனாவின் பலூன், இன்னும் சில தினங்களுக்கு அந்த பகுதியிலேயே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது இரு நாட்டு உறவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு:
- 14 நாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
- 'இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர்' - ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
- ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை
- மகளிர் டி20 லீக்கின் தொடக்க ஆட்டத்தில் மும்பை vs அகமதாபாத் அணிகள் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் நெற்றியில் திலகம் பூச மறுத்த வீடியோவை இணையத்தில் ஒருசிலர் பரப்பி எதிர்ப்பு வினையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion