மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளுர் முதல் உலக நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - தேனியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த நீர்
- தமிழ்நாட்டிற்காக காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
- காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை; மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
- அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்
- வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- பாஜக பிரமுகர் எச்.ராஜாவிற்கு எதிரான 7 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
- 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி, 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கு: நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன்
- சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை - ரயில் நிலையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா:
- எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்து மத்திய அரசு உத்தரவு - சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் மோடி பெருமிதம்
- I.N.D.I.A கூட்டணி மீதான மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நாளை தொடக்கம் - கூட்டணிக்கான இலச்சினை மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்
- நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி
- பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தின் முதல் பெண் தலைவராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்
- சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு
- பெங்களூருவில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்
- நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள்.. பாடல் பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சி
உலகம்:
- உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - விரைவில் விடுதலையாவார் என தகவல்
- பிரேசிலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் - 3 குழந்தைகள் உட்பட 9 பேர் தீயிட்டு கொளுத்தப்பட்டனர்
- ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 15 அடி நீள ராட்சத பாம்பு - பயந்து நடுங்கிய பொதுமக்கள்
விளையாட்டு:
- ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது - முல்தான் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் பலப்பரீட்சை
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் ஜோகோவிச்
- உலகக்கோப்பை தொடரில் இந்திஆ - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
- உலக பேட்மிண்டன் தரவரிசை - 6வது இடத்திற்கு முன்னேறினார் இந்தியாவின் எச்.எஸ். பினராய்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion