மேலும் அறிய
7 AM Headlines: உலகம் சொல்லும் செய்திகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
![7 AM Headlines: உலகம் சொல்லும் செய்திகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் today 7 am headlines 28th september 2023 headlines news tamilnadu india world 7 AM Headlines: உலகம் சொல்லும் செய்திகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/0d79c0a7fedaa7d45b65d32fd81b9e0a1695864377212732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு:
- அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
- தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
- காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான கெடு முடிந்தது - மீண்டும் தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் செய்வதால் கருகும் டெல்டா பயிர்கள்
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடகா அரசு
- கோடம்பாக்கம் - போரூர் இடையேயான சாலை பழுதுபார்ப்பு பணி விரைவில் முடியும் - மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
- தஞ்சாவூர் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - சார்ஜ் போட்டபடியே பேசியதால் நேர்ந்த விபரீதம்
- வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
- தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - பெருங்களத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இந்தியா:
- தூய்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
- மணிப்பூரில் வெடித்துள்ள மாணவர்களின் போராட்டத்தால் மீண்டும் பதற்றம் - மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஆளுங்கட்சியே காரணம் என பாஜக அலுவலகம் தீ வைத்து எரிப்பு
- மணிப்பூர் முதலமைச்சர் பிரைன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
- 2024ம் ஆண்டிற்கான உலக தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா - தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழமும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது
- சீன நிறுவனமான லெனோவா-விற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை - முழு ஒத்துழைப்பு அளிப்போம் என நிறுவனம் தரப்பில் உறுதி
- பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் மதச்சார்பற்ற கொள்கைய விடமாட்டோம் - முன்னாள் பிரதமர் தேவகவுடா உறுதி
- மலையாளத்தில் வெளியான 2018 திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்தது மத்திய அரசு
உலகம்:
- ஈராக்கில் திருமண விழாவில் நேர்ந்த சோகம் - மணமக்கள் உட்பட 120 பேர் உடல் கருகி பலி
- காலிஸ்தான் தீவிரவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம் - இது இந்தியாவின் கொள்கை அல்ல என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் பேச்சு
- தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பேத்தி புற்றுநோயால் மரணம்
- சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை
விளையாட்டு:
- இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி - 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
- ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணி விவரங்களை அறிவிக்க இன்று கடைசி நாள்
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம் உட்பட 22 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 7வது இடத்தில் தொடரும் இந்தியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion