மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: ஒரே நாளில் இவ்வளவு சம்பவம் நடந்துருக்கா? .. ஒரே நிமிடத்தில் அறிய.. காலை தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - 9 பேர் பலி, 8 பேர் காயம்
- திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு
- குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என்ற பேனர் மீண்டும் வைப்பு '
- நீண்ட நாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யக்கோரி செப்டம்பர் 30 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் - தமமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு
- மதுரை ரயில் தீ விபத்துக்கு ரயில்வே பாதுகாப்பு துறை தான் காரணம் - வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
- மதுரையில் ரயில் தீ விபத்துக்கு காரணம் சதி திட்டம் இல்லை என கூடுதல் டிஜிபி வனிதா தகவல்
- ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் லக்னோ அனுப்பப்படும் - ரயில்வே பொது மேலாளர் தகவல்
- விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம் - சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அறிவுரை
இந்தியா:
- ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் - பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்
- வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- மதுரையில் ரயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மம்தா பானர்ஜி இரங்கல் -அதிகாரிகள் கவனமாக இருக்க வலியுறுத்தல்
- சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா-எல்-1’ விண்கலம் வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல்
- பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் - முதலமைச்சர் பகவந்த் மான் இடையே கருத்து மோதல்
- ககன்யான் விண்கலத்தில் "வியோமித்ரா" என்ற பெண் ரோபோவை இந்தியா அனுப்ப உள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
- சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய பகுதி சிவ்சக்தி என அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
உலகம்:
- ருமேனியாவில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 33 பேர் படுகாயம்
- தண்ணீர் இல்லாத காரணத்தினால் சூயஸ் கால்வாயில் கப்பல்கள் செல்ல தடை
- சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி - மகத்தான அறிவியல் சாதனை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் பாராட்டு
- காரணமின்றி 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை - சவூதி அரசு அதிரடி
- மடகாஸ்கரில் தேசிய மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- உலக பேட்மிண்டன் போட்டி தொடரில் தென்கொரியாவின் அன் சே யங் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- நீரஜ் சோப்ரா வரலாறு படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
- இந்திய அணியில் இடம் பிடிக்க யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கனேரியா கருத்து
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் செப்டம்பர் 16 ஆம் தேதி தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தேர்தல் 2024
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion